துல்கர் சல்மான் படத்திற்கு முக்கிய படத்தின் பாடல் வரிகள் டைட்டிலாக!

நடிகர் துல்கர் சல்மான் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் ரசிகர்களை கொடுத்தது.

இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் வந்த சோலோ படமும் கைகொடுக்கவில்லை. மாறாக சில எதிர் விமர்சனங்கள் தான் வந்தது. தற்போது அவர் மகாநதி படத்தில் ஜெமினி கணேஷனாக நடித்து வருகிறார்.

மேலும் அவர் அறிமுக இயக்குனர் ரஞ்சித் படத்திலும், தேசிங்கு பெரியசாமி படத்திலும் கமிட்டாகியுள்ளாராம். இயக்குனர் தேசிங்கு படத்தில் அவர் ஐடி ஊழியராக நடிக்கவுள்ளார். இதில் நடிகை ரிது வர்மா ஜோடி போடுகிறார்.

நாளை டெல்லியில் இப்படப்பிடிப்பு தொடங்குவதோடு சென்னை, கோவா போன்ற இடங்களிலும் எடுக்கப்படுகிறது. இப்படத்திற்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என பெயர் வைத்துள்ளார்களாம்.

இது 1993 ல் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்றிலும் வெளியான திருடா திருடா படத்தில் வைரமுத்து எழுத்திய பாடல் வரி என்பது குறிப்பிடத்தக்கது.