10 வருடங்களின் பின்னர் இலங்கையில் கடலில் தோன்றிய விலங்கினம்..!!

இலங்கையின் கடற்பரப்பில் பத்து வருடங்களின் பின்னர் கடல் பன்றிக் கூட்டமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.கல்பிட்டி கடற்பரப்பில் இந்த கடல் பன்றிக் கூட்டம் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்கு முன்னர் கடல் பன்றியொன்று சோத்துபிட்டிய வாடிய பிரதேசத்தில் தோன்றிய பின்னர் தற்போது கல்பிட்டியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் கர்ப்பமான கடல் பன்றியின் சடலம் கரையொதுங்கியது.தற்பொழுது இலங்கை வனவிலங்கு திணைக்களம், நாரா நிறுவனம், ஐ.யூ.சி.யூ நிறுவனம் கடல் ஆமை பாதுகாப்பு நிறுவனம் ஆகியன கல்பிட்டிய பிரதேசத்தில் இந்த கடல் பன்றியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

கடல் தாவரங்களை உண்ணும் கடல் வாழ் பாலூட்டி மிருகமான கடல் பன்றி 3 அல்லது 4 மீற்றர் வரை நீளம் கொண்டது. கடல் பன்றி 500 முதல் 900 கிலோகிராம் வரை எடைகொண்டது.

About Thinappuyal News