ஒரே ஒரு ஓட்டில் தேசிய விருதை மிஸ் செய்த அஜித் படம்- ரீவைண்ட்

அஜித் நடிப்பில் கடைசியாக விவேகம் படம் வெளியாகி வசூலில் மாஸ் காட்டி இருந்தது. அடுத்து யாருடன் கூட்டணி அமைக்க போகிறார், எப்போது படம் துவங்க இருக்கிறது என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் அஜித்தை வைத்து முகவரி படம் எடுக்கும் போது நடந்த சில சுவாரஸ்ய விஷயங்களை கூறியுள்ளார் இயக்குனர் வி. இஸட். துரை.

அஜித்துக்கு மிகவும் பிடித்த படம் முகவரி, அவரே நிறைய பேட்டிகளில் கூறியுள்ளார். இப்பட டப்பிங் போது படம் நன்றாக வந்திருப்பதை தெரிந்து கொண்ட அஜித் அன்று இரவே எனக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்தார். கண்டிப்பா அவரோடு அடுத்து படம் இயக்குவேன். முகவரி படத்துக்கு ஒரு ஓட்டில் தேசிய விருது மிஸ் ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.

About Thinappuyal News