கிளிநொச்சி பூநகரி கிராஞ்சியில் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் பலி..!!

கிளிநொச்சி பூநகரி கிராஞசி பகுதியில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்றை அடித்து தீயிடுகையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர் தெரிவிக்கையில்,

நேற்று இரவு அவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று சென்றதாகவும், அதை அடித்து தமக்கும் காட்டிவிட்டு தீயிட்டுக்கொண்டிருக்கையில் வெடி த்தம் கேட்டதாகவும் குறிப்பிட்டார். பின்னர் தாம் வைத்தியாலைக்கு அழைத்து சென்றதாகவும், அதன் பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தா்ர.

அவரது குடும்பம் மிகவும் வறுமையானது எனவும், பிள்ளைகள் கல்விக்காக கஷ்டப்படுவதாகவும் குறிப்பிட்டார். அவரது குடும்பத்தினருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அவரது குடும்பத்தில் ஒரு பிள்ளை செஞசோலை சிறுவர் இல்லத்தில் கல்வி பயில்வதாகவும் குறிப்பிட்டார்.