பிரபல சீரியல் ஜோடி அன்வர், சமீராவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

சினிமாவில் நடிக்கும் நடிகர்களை தாண்டி சீரியல் பிரபலங்களுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற சீரியலில் ஜோடியாக நடிப்பவர்கள் அன்வர், சமீரா. இவர்கள் நிஜமாகவே காதலர்கள் என்பதால் சீரியல் ரசிகர்களுக்கு இன்னும் பிடித்துவிட்டது.

இன்று நடிகை சமீராவின் பிறந்தநாளுக்காக இருவரும் வெளிநாடு சென்றுள்ளனர். அங்கிருந்து இருவரும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அன்வர் பேசும்போது, என்னை பற்றி தவறாக தர்ஷிகா இன்பராஜ் என்ற ரசிகை தவறு தவறாக பேசி வருகிறார், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

ஆனாலும் அவர் நிறுத்தாமல் மற்றவர்களுடன் இணைத்து பேசி வருகிறார். ஒரு தங்கையாக உனக்கு நான் அறிவுரை கூறுகிறேன், இதோடு இப்படி செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி ரசிகர்களுக்கும் அவருடைய புகைப்படத்தை காட்டியுள்ளார்.