வவுனியா கள்ளிக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் கிராம சக்தி மக்கள் செயற்திட்டம் ஆரம்பித்துவைப்பு..!!

கிராம சக்தி மக்கள் மரம் நாட்டும் செயற்திட்டம் வவுனியா கள்ளிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிதம்பரம் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று காலை அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமையில் ஆரம்பித்து இந்நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கிராம சக்தி மக்கள் மரம் நாட்டும் செயற்திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவின் ஆரம்ப நிகழ்வே கள்ளிக்குளத்தில் இடம்பெற்றது. இவ் வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்ட திட்டப்பணிப்பாளரினால் எஸ்.கிருபாசுதன் அவர்களினால் மாமரக்கன்று நாட்டி வைக்கப்பட்டது. இதையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளும் மரக்கன்றுகளை நாட்டிவைத்ததையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட கிராமமக்கள் 200 பேருக்கும் பயன் தரும் நல்லின மாமரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, மாவட்ட செயலக திட்டப்பணிப்பாளர் கிருபாசுதன், உதவி திட்டப்பணிப்பாளர், பிரதேச மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கள்ளிக்குளம் கிராம சேவையாளர் கி.கஜந்தன், கள்ளிக்குளம் கிராமசேவையாளர் பிரிவிலுளள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.