தொன்று தொட்டு இலங்கையுடன் உறவுவை வளர்த்துவந்துள்ள இந்தியாவைப் புறந்தள்ளி – கோபமடையச் செய்து சீனாவுடன் உறவைப் பேணுவதுஆபத்தானது- சம்பந்தன்

96

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம் தள்ளி சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை ஆபத்தையே எதிர்கொள்ளும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் உரையாற்றும் போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதன்காரணமாக எதிர்காலத்தில் நாடு பெரும் விபரீதங்களையே சந்திக்க நேரிடும். ஆசியாவிலுள்ள எல்லா நாடுகளுடனும் இலங்கை உறவு வைத்துக் கொள்வது அவசிம்தான்.

எனினும் தொன்று தொட்டு இலங்கையுடன் உறவுவை வளர்த்துவந்துள்ள இந்தியாவைப் புறந்தள்ளி – கோபமடையச் செய்து சீனாவுடன் உறவைப் பேணுவது ஆரோக்கியமானதன்று.

இன்று போரியல், பொருளாதாரம், அரசியல் போன்ற சகல துறைகளிலும் சீனாவிடம் இலங்கை உதவியை நாடி நிற்கிறது. இதன்காரணமாக இலங்கை சீனாவின் ஆதிக்கத்துக்குள் வந்துள்ளது.

இது நாட்டுக்கு அழகல்ல. இலங்கை அரசு இந்தவிடயத்தில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். இந்தியாவுடனான உறவை பலப்படுத்தவேண்டும். சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நேரடியாக இலங்கைக்கு வந்து கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்பு துறை கடும் சீற்றம் அடைந்துள்ளது.

தமது அதிருப்தியை இந்திய பாதகாப்பு துறை இலங்கையிடம் தெரிவித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் பிராந்திய நாடுகளுடனான வெளிவிவகார கொள்கைகளை சரியாகக் கடைப்பிடிப்பதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

SHARE