அஞ்சலி தனக்கு தங்கையில்லை என்று சொன்னால் உண்மை மாறிவிடுமா? புது நடிகையால் சர்ச்சை – பின்னணியில் யார்

நடிகை அஞ்சலி ஒரு சில படங்கள் மூலம் சினிமாவில் நுழைந்த சீக்கிரத்தில் நல்ல இடத்தை பிடித்து விட்டார். இப்போது தமிழ், தெலுங்கு என மிகவும் பிசியாக இருப்பவர் நடிகை அவர்.

அதே நேரத்தில் நடிகர் ஜெய்யுடனான காதலும் தொடர்ந்து வருகிறது. திருமணம் குறித்த செய்திகள் வந்து போகிறது. ஆனால் சில நாட்களுக்கு முன் இவரை காணவில்லை என அஞ்சலியின் சித்தி புகார் கொடுக்க விசயம் வெளிவந்தது.

அஞ்சலிக்கும் அவரது சித்தி பாரதிக்கும் நீண்ட நாளாக கருத்து வேறுபாடு இருந்துவருகிறது. காதலுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூட சொல்லப்பட்டது. பின் இருவரும் சமாதானமானார்கள்.

அஞ்சலியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாரதி இப்போது தன் மகள் ஆராத்யாவை சினிமாவில் இறக்கியுள்ளாராம். அவர் அஞ்சலி தான் என் அக்கா, அவர் என்னை தங்கையில்லை என சொன்னால் உண்மை மாறிவிடுமா என சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.

About Thinappuyal News