விஷாலுக்கு நடந்த ரெய்டு, இத்தனை கோடி பணத்திற்கு விஷால் சொன்ன பதில்வீ

விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டு பொறுப்பளையும் தலையில் ஏற்றிக்கொண்டு வேலைப்பார்த்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் தான் இவர் அலுவலகத்தில் ரெய்டு நடந்து முடிந்தது.

இதை தொடர்ந்து டுவிட்டரில் தற்போது ஒரு வீடியோ வைரலாகியுள்ளது, பல கோடி பணத்துடன் விஷால் இருப்பது போலவும், அதை ரெய்டு செய்யும் அதிகாரிகள் இது யார் பணம்? என்று கேள்வி கேட்கின்றனர்.

விஷால் அதற்கு நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் என்று சொல்ல, உடனே அர்ஜுன் உள்ளே வந்து ‘அட போங்கயா, இதெல்லாம் வெறும் பேப்பர்’ என்று சொல்லி நகர, பிறகு தான் தெரிந்தது அது இரும்புத்திரை படத்தின் ப்ரோமோஷன் என்பது, ஆனால், இந்த வீடியோவிற்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது…