அறம் படம் தேர்ந்தெடுக்கும் போது நயன்தாரா இப்படி ஒரு நிலைமையில் இருந்தாராம்- இயக்குனர் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக மாஸ் படங்கள் கொடுத்து கலக்கி வருபவர் நயன்தாரா. அதற்கு உதாரணமாக தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அறம் படத்தை கூறலாம். படம் முழுவதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நயன்தாராவின் எதார்த்த நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல பாராட்டை பெற்றிருக்கிறது.

படத்தின் கதை நன்றாக உணர்ந்த நயன்தாரா பல தயாரிப்பாளர்களின் படங்களை தாண்டி இப்படத்தில் நடிக்க முக்கிய ஆர்வம் காட்டினாராம். இதுகுறித்து இயக்குனர் கோபி சினிஉலகத்திற்கு கொடுத்த பேட்டியில், இந்த படத்தை நயன்தாரா கதை முக்கியத்துவம் அறிந்து நடித்துள்ளார்.

கதை பற்றி பேச அவர் வீட்டிற்கு சென்றபோது, நயன்தாரா கதவை திறந்துகாட்டி இவர்கள் எல்லாம் என்னுடைய தேதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் முதலில் நான் உங்களுடைய படத்தில் நடிக்கிறேன் என கூறினார். பல தயாரிப்பாளர் அவருடைய தேதிக்காக காத்துக் கொண்டிருக்கும் போது என் படத்தில் நடித்தார் என்றார்.

அறம் திரை விமர்சனம்

About Thinappuyal News