மஹிந்த பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்: சொல்ஹெய்ம் –

128
நோர்வே அரசு மீதும் தன் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்துள்ளதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
norway_ltte_meet_sankar

நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி, நோர்வேயின் முன்னாள் அரசு மீதும், சொல்ஹெய்ம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்கள் குறித்த மறுப்பு அறிக்கையை நாளை திங்கட்கிழமை வெளியிடவுள்ளதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை ஜனாதிபதி தன்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்க முடியாதவை. அவர் பொய் சொல்லுகிறார் என்றும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு நோர்வேயின் நிதியுதவி தொடர்பில் விசாரணை வேண்டும்!- ஜனாதிபதி

விடுதலைப் புலிகளுக்கு போர்க் காலத்தின் போது நோர்வே நிதியளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்த நாடு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

நோர்வே, புலிகளின் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகளை வழங்கியது. அதற்கான ஆதாரங்கள் இலங்கை அரசாங்கத்திடம் உள்ளன என்று ஜனாதிபதி குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குற்றம் சுமத்தினார்.

அத்துடன் நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு பக்கபலமாக செயற்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் அந்த மனிதன், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

 

SHARE