ஜேர்மன்- செக் குடியரசு ஜனாதிபதிகள் மீது முட்டை வீச்சு

118

செக் குடியரசில் வெல்வட் புரட்சியின் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் அந்நாட்டின் ஜனாதிபதி மீது முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு ஆதரவாக செக்குடியரசின் ஜனாதிபதி மிலோஸ் ஸேமன் செயற்படுவதன் காரணமாக அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

செக் குடியரசில் கம்பியூனிஸ்ட் ஆட்சி நிறைவுக்கு வந்தததை நினைவு கூறும் விதமாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜேர்மன் ஜனாதிபதி மீதும் முட்டை வீச்சு இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

SHARE