ரோமானியா நாட்டு முன்னாள் மன்னர் மைக்கேல் காலமானார்.!

ரோமானியா நாட்டை 25-10-1921 முதல் முதல் 8-6-1930 வரையிலும் பின்னர் 6-9-1940 முதல் 30-12-1947 வரையிலும் இருமுறை ஆட்சி செய்தவர் மன்னர் மைக்கேல்.

1947-ல் ஆண்டில் நடைபெற்ற போருக்கு பின்னர் ரோமானியா நாட்டின் ஆட்சியை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றிய பின்னர் பிரிட்டன் நாட்டு அரசி எலிசபெத்தின் ஒன்றுவிட்ட சகோதரரான இவர் 1948-ம் ஆண்டு ரோமானியாவை விட்டு வெளியேறி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வந்தார்.

புற்றுநோய் மற்றும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் உடல்நலக் குறைவால் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த 2016-ம் ஆண்டில் அறிவித்தார்.

இந்நிலையில், 96 வயதான மைக்கேல் சுவிடஸ்ர்லாந்து நாட்டில் உள்ள அவுபோன் நகரில் இன்று மரணம் அடைந்ததாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.