தேசியத்தலைவர் பிரபாகரனினால் உருபாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சுக்குநூறாக்கினார் சுரேஸ்பிறேமச்சந்திரன்

 

உள்ளுராட்சி தேர்தல் எமக்கான தீர்வை பெற்றுத் தந்துவிடுமா?

உள்ளுராட்சி தேர்தலில் வென்றால் எமது கோரிக்கைகள் நிறைவேறுமா?

விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைத்து சின்னாபின்னம் ஆக்குவதற்கு ரனில் தலமையில் ஆன குழு 150 கோடி ஆயுதக்கட்சிகளுக்கு வழங்கி உள்ளதாக புலனாய்வுத்தகவல்

கடந்த பலவாரங்களாக கதிரைக்கும் பதவிக்கும் ஆசனப்பகிர்வீட்டிற்கும் அடிபட்டக்கொண்டிருக்கும் ஆயுதக்கட்சிகள் தமிழரசுக்கட்சியில் இருந்து விலகுவதற்கென 150 கோடி பணம் கொடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே தழிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கும் டெலோ புளொட் ஈ பி ஆர் எல் எப் விலகிச்செல்வதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது ரனிலின் அடுத்தகட்ட நகர்வாக இருந்து வந்துள்ளது பதவி மோகத்தை கொடுத்து ஆயுதக்கட்சிகளை விலைக்கு வாங்க முடியும் என்பது ரனில் நன்கு திட்டப்பட்டு நடத்தப்பட்டுள்ளது கூட்டமைப்பின் பலத்தை உடைப்பதன் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வுத்திட்டத்தை திசைதிருப்பி இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பது ரணில் அவர்களின் நரிப்புத்தி இதை விளங்கிக்கொள்ளாத ஆயுதக்கட்சிகள் மீண்டும் அரசாங்கத்தின் எலும்புத்துன்டுக்கு இரையாகி உள்ளார்கள் .

ஏன் இந்த முறன்டுபிடிப்பு? எப்போதும் நாம் ஒரே கொள்கையில் இயங்குவதாக கூறி விட்டுக்கொடுப்புகள் இன்றி இனைந்து போகாமல் தனித்து நின்று சாதிக்கப்போவது என்ன? கொள்கை தவறிப்பயணிக்கும் தமிழரசுக் கட்சியை கடிவாளம் போட்டு நிறுத்த கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடும் கட்சியின் மேதாவித்தனமானது மிகவும் சிறுமையானது.

தந்தை செல்வா காலத்தில் இருந்து சயிக்கிள் சின்னமானது ஒரு தோல்வியின் குறியீடாகவே தமிழ்மக்கள் பார்க்கிறார்கள். அதில் ஏலவே பயணிக்கமுடியாது அவ்வாறான சிந்தனையிருந்தால் நான் உங்கள் கூட்டுக்கு வருவதை மறந்துவிடுங்கள் என திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். அதை அவ்வேளையில் ஆமோதித்து விட்டு இறுதி நேரத்தில் சயிக்கிளில் பயணிக்க நினைப்பது அபர்த்தம்.

திரு ஆணந்தசங்கரி அவர்கள் தனது சின்னத்தை பொது சின்னமாக பாவிப்பதற்கு உடன்பட்டதோடு மட்டும்மல்லாது கட்சிக்கு தலா ஏள்வர் கொண்ட அணியை அமைத்து எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக செயல்படவும் முன்வந்தார். இவ்வாறான மாற்றத்துக்கு உடன்படும் கட்சிகளுடன் இனைந்து பணியாற்றும் போதே ஜனநாயகம் வலுப்பெறும் கடந்த கால தவறுகளை தூசிதட்டும் நேரம் அல்ல இது.

தமிழரசுக்கட்சியை பலமிழக்க செய்ய ஒரே கொள்கையுள்ள பல அணிகள் திரண்டாலே வெற்றிபெறமுடியும். இல்லையேல் பிற பெரும்பான்மை கட்சிகள் வடகிழக்கில் காலுண்ட நாமும் காரணியாவோம் அப்படி ஒன்று நடக்கவா திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விரும்புகிறாரா?

கட்சியில் இனைந்தால் தேசியவாதி இல்லையேல் இந்தியாவின் உளவாளி என ஆருடம் கூறும் தம்பிகளே Row போன்ற அமைப்புகள் தமக்கு வேண்டிய வேலையை செய்ய நமது வீட்டு வாசல்படிக்கே வந்து செல்லும் நிலமையில் வடகிழக்கு மாகாணம் இருக்கும் போது சென்னையில் வரவழைத்து சிந்தனையை மாற்றிவிட்டார்கள் என்ற அவசரகுடுக்கையை போன்று வதந்திகளை பிதற்றாதீர்கள்.

நீங்கள் யாதார்த்தமாக எந்த சிந்தனையையும் முன்னேடுக்க வேண்டும். எமக்கு நட்புக்கரம் நீட்டும் பலமான நாடுகளுடன் எமக்கான இலக்கை அடையும் வரை பகைக்காமல் நட்பு பாராட்ட வேண்டிய அவசியம் மறுதலிக்கமுடியாதது. அதில் அவர்களின் பூலோக நலன்களும் அடங்கியிருக்கலாம் அதை நாம் தவிர்த்து பயணித்தால் எம்மினம் பாரிய வரலாற்று தோல்வியை மட்டும்மல்ல சுயத்தையும் இழக்கும்.

மீண்டும் ஒரு ஆயுத போருக்கு தாயகத்தில் வாழும் தமிழர்கள் இறங்கமாட்டார்கள். அவ்வாறு இறங்கினால் இன்னும் இருபது வருடத்தில் மாற்று இனம் எம் மண்ணை ஆளுவதற்கு நாம் வழிசமைப்பதாக முடியும். இது எம்மக்களுக்கு புரியும்.இவ்வாறான சூழ்நிலையில் எம்மால் முடிந்தளவு உலக ஓட்டத்துடன் இனைந்து எம்மக்களுக்கு ஒரு உரிமையுடன் கூடிய உயர்ந்த அதிகாரத்தை பெற்று கொள்ளவேண்டும்.

தமிழரசுக்கட்சியானது கிடைத்த சந்தர்பங்களை தவறவிட்டு ஆளும் கட்சியின் தாளத்துக்கு ஆடுவதாலயே தலைமை மாற்றத்தை வேண்டி ஒரு மெகா கூட்டணியை ஸ்தாபிப்பதற்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் பல விட்டுக்கொடுப்புகளை கொடுத்து ஒரு ஆக்கபூர்வமான அணியை உருவாக்க அல்லும் பகலும் அயராது உழைக்கும் போது வறட்டுத்தனமான கோரிக்கைகளை முன் வைப்பது யாரும் ஏற்கமுடியாத விடயம்.

எம் மக்கள் தமிழரசுக்கட்சியை எதிர்பது ஆளும் கட்சியுடன் இனைந்து உரிமையை பின்தள்ளி சலுகை அரசியலுக்கு சென்றமையே. அவர்கள் அதற்காக அரசுடன் பேசுவது குற்றமென்று எங்கும் கூறவில்லை.
திரு சித்தார்த்தன் 2009 வரைக்கும் புலி எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டவரே அவரை போன்று இறுதிவரை புலி எதிர்ப்பில் இருந்து விட்டு இறுதியில் கூட்டமைப்புடன் இனைந்த போது மக்கள் கடந்தகால தவறை பின்தள்ளி அவரை அதிகூடிய வாக்களித்து வெற்றி பெற வைத்ததை கருத்தில் கொள்ளவும்.

ஒரு வாதத்துக்கு எடுத்தால் அவ்வாறான பெரும் தவறுகளை ஆணந்தசங்கரி ஐயா செய்யவில்லை. ஏன் சம்பந்தன் ஐயா போன்று தமிழ் மக்களின் அமோக வாக்குகளை பெற்று விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் என்று எங்கும் கூறியதாக நான் அறியேன்.

யாதார்தமாக சிந்தியுங்கள் நிகழ்கால தவறுகள் எதிர்காலத்தை பாழ்படுத்தக்கூடாது.

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த LTTE யின் முக்கிய தளபதிகளுக்கு நடந்த உண்மைகளை மாவை சேனாதிராஜா அறிந்திருந்தார்.

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளை சரணடையுமாறு சர்வதேசம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இதில் விடுதலைப்புலிகளின் தூதுவர்களாக மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திரநேருவின் மகன் கஸ்ட்ரோ உள்ளிட்ட 10 முக்கிய உறுப்பினர்கள் உள்ளடக்கப்படுகின்றனர்.

tna3

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த போராளிகளுக்கு என்ன நிகழப்போகிறது என்ற விடயம் இவர்களுக்கு நன்கு தெரியும். அதேவேளை மாவை சேனாதிராஜா 2007-2008 போன்ற காலப்பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் சிறிய ரக விமானத்தின் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவந்திருந்ததுடன் அது மட்டுமல்லாது இவர் சென்ற விமானத்தில் இந்திய படையினரும், வேறுநாடுகளின் படையினரும் பலாலி இராணுவத்தளத்திற்குச் சென்றிருந்தனர்.

விடுதலைப்புலிகள் சரணடையும் பொறுப்பினை பசில் ராஜபக்ஷ அவர்கள் மேற்கொண்டிருந்தார். அது எவ்வாறெனில் 500க்கு மேற்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதிகள் அமெரிக்காவினுடைய கடற்கப்பலில் செல்வதற்கான ஒழுங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

u1_New-2a

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் மேற்குறிப்பிடப்பட்டோர் தொடர்பினை மேற்கொண்டபொழுது, மனிதாபிமான அடிப்படையில் எமது இராணுவ வீரர்கள் அவர்களை மீட்டுக்கொள்வார்கள் என மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்திருந்தார். அதனையடுத்து விடுதலைப்புலிகள் 20கி.மீ பரப்பளவுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

போராளிகள் சரணடைவதற்கான வாய்ப்புக்கள் இல்லாதிருந்து. சரணடைந்த விடுதலைப்புலிகள் வேறு நாட்டிற்கு கொண்டுசெல்லப்படும் திட்டமும் கைவிடப்பட்டது. இதுதொடர்பில் விரிவான திடுக்கிடும் தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளன.
போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் மேற்குறிப்பிட்டோரது சாட்சியங்கள் போதுமானவையாக அமையப்பெறும். உண்மைச் சம்பவங்கள் இவ்வாறிருக்க, தமது அரசியலை மேலோட்டமாக பதவிக்கு ஆசைப்படுவதைத் தவிர்த்து தமிழினத்தில் அக்;கறை காட்டுவதன் மூலம் போர்க்குற்ற விசாரணையில் இலங்கையரசை சட்டத்தின் முன் நிறுத்தி தீர்வுகாணமுடியும் என்பதே தமிழ் மக்களுடையதும், ஏனைய அரசியல்வாதிகளினுடையதும் கருத்தாகும்.

யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதிகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருசிலர் விடுதலைப்புலிகளுடன் நேரடித்தொடர்பில் ஈடுபட்டனர். இன்றும் கூட விடுதலைப்புலிகளால் சிபாரிசு செய்யப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிரை யுத்தம் நிறைவுபெற்றநிலையில் அவர்களை ஓரங்கட்ட முயற்சிப்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

tna.leaders-ltte
உண்மைச்சம்பவங்களை இவ்வரசியல்வாதிகள் வெளிவிடாததன் காரணம் அரசின் மிரட்டல்களாகவும் இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இதற்கிடையில் எதிர்வரும் 07ம் திகதி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் புதிய தலைமைத்துவம் தெரிவுசெய்யப்படவுள்ளது. இப்பதவிக்கு சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தமிழ்மக்களுக்கும், தமிழ் மக்களின் போராட்டத்திற்கும் துரோகம் விளைவித்தவர்கள் தமிழரசுக்கட்சி தாய்க்கட்சி எனக்கூறிக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றநினைக்கக்கூடாது.

இதுதொடர்பான உண்மைச்சம்பவங்கள் 100ஃ75 வீதம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்களிலிருந்து தமிழரசுக்கட்சியை ஓரங்கட்ட நினைக்கும் அதேநேரம் தமிழரசுக்கட்சியாக இருந்து கொண்டு தமிழ்மக்களுக்கான எந்த அதிகாரத்தினையும் இதுவரையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பதனை சிந்தித்துப்பார்;க்கவேண்டும்.
தமிழ்மக்களுக்கு விடிவு எப்போது கிடைக்குமென அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு சோரம்போகும் அங்கத்தவர்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலேயோ, தமிழரசுக்கட்சியிலேயோ அங்கம் வகிப்பவர்களை இனங்கண்டு அவர்களை புறந்தள்ளி, உண்மையாக கட்சியை வளர்த்தெடுப்பவர்களின் கையில் கட்சித்தலைமைப்பொறுப்புகள் ஒப்படைக்கப்படவேண்டும்.

சாடிக்கேற்ற மூடியாக சம்பந்தன் அவர்கள் செயற்படுவாராகவிருந்தால் தமிழ்மக்களுடைய போராட்டவழி சின்னாபின்னமாக்கப்பட்டு அரசாங்கத்தோடு இணைந்த அரசியலை நடாத்தநேரிடும். விடுதலைப்புலிகள் என்று அழிவார்கள் என சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தவர் இரா.சம்பந்தன் என்பதை மக்களும் ஏனைய அரசியல்வாதிகளும் மறக்கவில்லை.

சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் சந்திரிக்கா அவர்கள் சம்பந்தன் ஐயா அவர்களை ஷேம் என தோளில் தட்டி அழைப்பார் அதுமட்டுமல்லாது அக்காலகட்டத்தில் அரசினுடைய வலது இடது கையாக செயற்பட்டுவந்தார். தமிழரசுக்கட்சி ஆயுதக் கலாசாரமற்ற கட்சியொன்றுதான்.

அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனாலும் 30 வருட போராட்டத்தின் பின்னரும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மீண்டுமொருமுறை இந்தியாவை நம்பி பா.ஜ.க வுடன் பேச்சுக்கள் இடம்பெறுகிறது.
இதுவும் தமிழினத்திற்கு மீண்டும் ஒரு அபாயசங்கினை ஊதும் விடயமாகவே கருதப்படுகிறது.

இக்காலகட்டத்தில் அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்ப செயற்படவேண்டும் எனக்கூறிக்கொள்ளும் தமிழரசுக்கட்சி, தமிழிழனம் சோரம்போகுமளவிற்கு செயற்படக்கூடாது என்பதே மக்களினது எதிர்பார்ப்பு. யார் யார் எல்லாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டார்கள், அவர்களுடைய அரசியல் பின்வாசல்கள் எங்கெங்கெல்லாம் அரங்கேறியது, ஏப்படி எப்படியெல்லாம் நடைபெற்றது என்பது பற்றி பல்வேறு தகவல்கள் இருக்கின்றன.

ஆனாலும் அதனையெல்லாம் வெளிவிடுமிடத்து தமிழினத்திற்கும், தமிழ்க்கட்சிகளுக்குமிடையில் பிளவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்ற காரணத்தினால் இதைத் தவறென சுட்டிக்காட்டும் அதேநேரம், தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு புதிதாக தமிழரசுக்கட்சியை வழிநடத்திச்செல்பவர் மேற்கொள்வதன் மூலம் தமிழ்மக்களுக்கான உரிமையை வென்றெடுக்கமுடியும் எனலாம்.

– இரணியன் –

About Thinappuyal News