பெற்ற குழந்தையை கொன்று வாஷிங் மிஷினில் மறைத்து வைத்த தாய் கைது.!

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் ஆர்தி. இவருக்கு 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இவரது கணவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்தினர் அனைவரும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். இருப்பினும் பெண் குழந்தையை அன்பாக வைத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை முதல் காணவில்லை என போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த வாஷிங் மிஷினில் குழந்தையின் உடல் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஆர்த்தி தான் குழந்தையை கொன்றார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

About Thinappuyal News