தேர்தலுக்கு பொறுப்பாக  சீ.டீ. விக்ரமரத்ன நியமனம் 

தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சீ.டீ. விக்ரமரத்ன நிர்வாக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் அதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.