அத்தியவசிய பொருட்கள் சிலவற்றுக்கு புதிய விலைகள்

தேங்காய், பருப்பு உள்ளிட்ட சில அத்தியவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தேங்காய் ஒன்றின் விலை 75 ரூபாவாகவும் ஒரு கிலோ பருப்பின் விலை 130 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்பட்ட உருளை கிழங்கின் விலை 75 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இன்று முதல் இவ்விலைகள் அமுலுக்கு வருவதாக அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்தார்.

About Thinappuyal News