ஆடைகளை களைந்து சித்திரவதை அம்பலமான சிறை அதிகாரிகளின் வெறிச்செயல்..! (வீடியோ)

பிரேசிலில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் கைதிகளை நிர்வாணப்படுத்தி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும் என நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் பெரும்பாலான சிறைச்சாலைகள் அதிக எண்ணிக்கையிலான கைதிகளால் நிறைந்துள்ளது. மட்டுமின்றி போதிய காவலர்களும் இல்லாததால் அங்குள்ள சிறைச்சாலைகள் சித்திரவதை கூடங்களாக மாறியுள்ளன.

பெரும்பாலான சிறைக்கைதிகளை அரை நிர்வாண கோலத்திலேயே சிறைக்குள் காவலர்கள் நடத்துகின்றனர். சில கைதிகளை முழு நிர்வாணமாக அறைக்குள் பூட்டிவைத்து கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்குகின்றனர்.

பாலியல் துன்புறுத்தல்களும் மிக அதிக அளவில் நடைபெறுவதாகவும் சிறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பிரேசில் சிறையில் நடந்ததாக வெளியான குறித்த வீடியோவால் அரசியல் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

About Thinappuyal News