பொம்மைகளை வைத்து மக்களை ஏமாற்றிய மிருகக்காட்சி சாலை மாட்டி கொண்டது .!

உண்மையான பறவைகளுக்கு பதிலாக பொம்மைகளை வைத்து மிருகக்காட்சி சாலை ஒன்று இயங்கி வந்த நிலையில் தற்போது மூடப்பட்டுள்ளது.

சீனாவின் யுலின் நகரில் குயிசன் மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது, இங்கு அரிதான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளது என விளம்பரப்படுத்தப்பட்டது.

இதை நம்பி பல மக்கள் அங்கு சென்றுள்ளனர். டிக்கெட் விலை £1.60 என குறைந்த அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மிருகக்காட்சி சாலைக்கு சென்ற மக்கள் பலர் அதிருப்தி அடைந்தனர். காரணம் நிஜ பென்குவின் பறவைகள் இருக்கும் கூண்டில் பொம்மை பென்குவின் பறவைகள் இருந்தன.

பெரிய விலங்குகள் எதுவும் அங்கு இல்லாமல் இருந்த நிலையில் கோழி, வாத்து, ஆமை போன்ற விலங்குகள் மட்டும் இருந்தன.

அதிலும் மக்களிடம் பணத்தை பறிப்பதற்காக கண்ணாடி பெட்டியில் இருந்த ஆமை கூண்டில் இது அதிர்ஷ்டத்தை தரும் என எழுதப்பட்டிருந்தது.

இதையெல்லாம் பார்த்து வெறுத்து போன பார்வையாளர்கள் குயிசன் மிருகக்காட்சி சாலை குறித்த போலி விடயங்களை சமூகவலைதளங்களில் பதிவிட அது வேகமாக பரவியுள்ளது.

இதையடுத்து குயிசன் மிருகக்காட்சி சாலை தற்போது மூடப்பட்டுள்ளது.

About Thinappuyal News