முதியோர் இல்லத்துக்கு தரப்பட்ட உணவு பெட்டியில் குவியலாக இருந்த தங்க நாணயங்கள்.!உரிமையாளரிடமே தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதியோர் இல்லத்துக்கு தரப்பட்ட உணவுப்பெட்டியில் குவியலாக தங்க நாணயங்கள் இருந்த நிலையில் அதன் உரிமையாளரிடமே தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் மோன்சென்கிளாட்பேச் நகரில் முதியோர் இல்லம் அமைந்துள்ளது,அங்கு சமீபத்தில் நன்கொடையாக உணவுகள் சில பொட்டிகளில் வைத்து தரப்பட்டது.அதில் ஒரு பெட்டியை இல்லத்தின் மேலாளர் அஞ்சா மாசர் திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

காரணம், பெட்டியில் 109 தங்க நாணயங்கள் இருந்துள்ளது, இதன் மதிப்பு €100,000 மேல் இருக்கும். நாணயங்களின் மீது தென் ஆப்பிரிக்காவின் தேசிய விலங்கு படம் இருந்ததால் அது அந்நாட்டின் நாணயங்கள் என கண்டறியப்பட்டது.

பின்னர் இதுகுறித்து பொலிசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது, உணவு பெட்டியை கொடுத்தது 78 வயதான ஒரு முதிய விதவை பெண்மணி என தெரிந்த நிலையில் அவரின் விலாசத்தை பொலிசார் தேடி வந்தார்கள்.

அதிர்ஷ்டவசமாக பெண்மணி நன்கொடையாக கொடுத்த உணவு பெட்டிகளில் ஒன்றில் விலாசம் இருந்துள்ளது.

இதையடுத்து அவரிடம் தங்க நாணயங்களை பொலிசார் ஒப்படைத்தனர், இதுகுறித்து அந்த முதிய பெண் கூறுகையில், தங்க நாணயங்கள் நன்கொடையாக அளித்த உணவு பெட்டிக்குள் எப்படி போனது என தெரியவில்லை, இதை திரும்ப என்னிடம் கொடுத்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.

மதிப்புமிக்க சேகரிப்புகளை திருடுவதற்கு இது போன்ற வழி கையாளப்பட்டதா என்ற கோணத்தில் பொலிசார் நாணயங்கள் பெட்டிக்குள் வைக்கப்பட்டது குறித்து விசாரித்து வருகிறார்கள்.