உடல் பாகங்கள் இல்லாத நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு

கடடுகஸ்தோட்டை பிங்கா ஓயாவில் ஆற்றில் மிதந்துகொண்டிருந்த நிலையில் குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிறந்து சில நிமிடங்களிலேயான இந்தக் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் சடலத்தின் சில பாகங்கள் மிருகங்களால் உட்கொண்ட நிலையில் சேதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையை ஆற்றில் வீசியவர்களை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை அங்கிருந்த வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.