ஹிந்தி நடிகர்களுக்கு அந்த விஷயத்தில் விஜய் ஒரு உதாரணம்- இயக்குனர் பராக் கான்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த படம் நண்பன். இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் பாலிவுட் பிரபலம் பராக் கான்.

இவரிடம் விஜய் பற்றியும் அவரின் நடனம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், விஜய் மிகவும் நல்ல மனிதர், காலையில் 7.30 படப்பிடிப்பிற்கு சரியாக வந்துவிடுவார். அவரின் நடனம் பார்த்து ஒரு சில நேரங்களில் பிரம்மித்தேன்.

அவரை உதாரணமாக வைத்து நிறைய பாலிவுட்டின் இளம் நடிகர்களுக்கு நடனம் பற்றியும் கூறலாம். அவருடன் இன்னும் வித்தியாசமான பாடலை நடன அமைக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

About Thinappuyal News