விஜய் கேட்டால் அப்படி ஒரு வேடத்தில் கூட நடிக்க தயார்- பிரபல நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் நடிக்க பல நடிகர்கள் ஆசைப்படுகின்றனர். அப்படி விஜய்யுடன் அவரது படத்தில் நடிக்க ஆசைப்படுபவர் சிபிராஜ்.

இவரது நடிப்பில் நாளை சத்யா என்ற திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிபிராஜிடம் விஜய் குறித்து கேட்கப்பட்டது.

அப்போது அவர், விஜய் என்னை அவரது படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க கேட்டால் உடனே நடிப்பேன். நமக்கு என்று ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும், ஆனால் விஜய் என்று வரும்போது இல்லை.

அதோடு என்னுடைய வேடமும் முக்கியம், அவருடன் இணையாக நடிக்கும் படி இல்லை என்றாலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.