ஆபாசமாக காட்டும் iபோன் அனைவருடைய கைகளிலும் இந்தப் போன் தவழ்ந்துவரும் என்பதில் சந்தேகம் இல்லை

447

 

0 (1)

ஆபாசமாக காட்டும் iபோன் அனைவருடைய கைகளிலும் இந்தப் போன் தவழ்ந்துவரும்
என்பதில் சந்தேகம் இல்லை

0 (1)

220

தொழில்நுட்பங்கள் நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கின்றன. வெளிநாடுகளில் இருப்பவர்களைக் கூட நேரில் கண்டு பேசும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அது தூரங்களை குறைத்து குறைத்து இப்போது படுக்கையறை வரை வந்துவிட்டது. அடுத்தவரின் படுக்கை அறையில், கடைகளில் துணி மாற்றும் இடத்தில் அவருக்கு தெரியாமல் வீடியோ எடுக்கும் அபாயம் பற்றி இப்போது தான் மெல்ல மெல்ல விழிப்புணர்ச்சி ஏற்பட்டுக் கொண்டருக்கிறது.

இப்படிப்பட்ட தருணத்தில் நாம் உடையணிந்திருந்தாலும் நம்மை நிர்வாணமாய் காணோளி பதிவு செய்யும் மென்பொருள்கள் வந்தால் நாம் என்னாவாவோம்?. நம்முடைய சுகந்திரம் எந்தளவு பரிபோகும்?. நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. ஆனால் இந்த மென்பொருள்கள் வந்துவிட்டதாக இணையம் பயமுறுத்துகிறது.

அதைப் பற்றிய இடுகைதான் இது.

ஐ போன் –

ஐ போனைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. கண்டிப்பாக உங்களுக்கு ஐபோனைப் பற்றி தெரிந்திருக்கும். ஒரு குட்டி கணினியாக கைக்குள் அடங்கி விடும் அதன் வரவேற்பினைக் கண்டு உலகமே பிரமித்திருந்தது.

நிர்வாணமாக காட்டும் மென்பொருள் –

ஐபோனில் இணையத்திலிருந்து அதற்கான மென்பொருள்களை தரவிரக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் சில நிர்வாணமாக காட்டும் மென்பொருள்களும் அடங்கிவிடும்.

விளம்பரங்களில் இரண்டு மென்பொருள்களை காண முடிந்தது. ஒன்று ஐநேக்கிட், மற்றொன்று நியூட் இட்.

ஐநேக்கிட் ஆப்பில் ஐபோனின் மென்பொருள் என்று விளம்பரம் சொல்லுகிறது. ஆனால் ஆப்பில் ஐபோன் தளத்தில் எஸ்ரே மென்பொருள் மட்டும் கிடைக்கின்றது. இதைக் காணவில்லை.

அடுத்தது நியூட் இட். இந்த மென்பொருள் இணையத்திலேயே இலவசமாய் கிடைக்கிறது. தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும். இந்த இணைப்பைக் கொடுக்க காரணம், நீங்கள் பயன்படுத்தி அதன் உண்மைத் தன்மையை நிச்சயம் செய்து கொள்ளத்தான்.

எப்படிச் சாத்தியம் –

உங்கள் புன்னகையின் போது படம் பிடிக்கும் புகைப்படக் கருவிகளைக் கண்டிருக்கின்றீர்களா. அந்தக் கருவி உங்கள் முகத்தினை அறிந்து நீங்கள் சிரிக்கும் போது தானாகவே புகைப்படம் எடுத்துவிடும் தன்மையுடையது. அது போல இந்த மென்பொருளும் உங்களின் முகத்தினை அறிந்து கொண்டு, உங்கள் நிறம், பருமன் போன்றவற்றைக் கணக்கிட்டு போலியான உடலை உங்களின் தலையுடன் இணைத்துவிடலாம் என்கின்றனர் சிலர் பயனாளர்கள்.

அதிரவைக்கும் காணோளிகள் –

உண்மையா –

இந்த மென்பொருள் வெளிவந்தது உண்மைதானா என்று என்னால் உறுதிகூற இயலாது. ஆங்கில வலைப்பூக்கள் சில உண்மை என்றே அடித்துக் கூறுகின்றன. எனினும் வந்திருந்தால் அபாயத்தை நெருங்கிவிட்டோம், வரவில்லையெல்லாம் கொஞ்ச காலம் நிம்மதியாக இருக்கலாம்.

எனக்கு தெரிந்தவைகளை இட்டுவிட்டேன். இனி உங்கள் பங்கு நண்பர்களே!.

SHARE