சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம், சர்வாதிகார ஆணவம் வேண்டாம்- ஜே.வி.பி கொழும்பில் பேரணி

123
சர்வாதிகார ஆணவம் வேண்டாம் என்ற கோஷத்துடன் ஜே.வி.பி. யினர் நேற்று கொழும்பில் பிரமாண்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.

ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்புடன் இணைந்து ஜே.வி.பி. யினர் மேற்கொண்ட குறித்த பேரணி நேற்று மாலை மருதானை ஆனந்த கல்லூரி அருகில் ஆரம்பித்து, புறக்கோட்டை பரடைஸ் மைதானத்தில் முடிவடைந்திருந்தது.

இதில் சுமார் பத்தாயிரம் பேரளவில் கலந்து கொண்டிருந்தனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம், சர்வாதிகார ஆணவம் வேண்டாம், போன்ற கோஷங்களை எழுப்பியவாறு சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.

குறித்த பேரணி காரணமாக மருதானை முதல் புறக்கோட்டை வரையான பாதைகளில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

– See more at: http://www.newstamilwin.com/show-RUmszBScKYjx2.html#sthash.sEys8vnr.dpuf

SHARE