மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லாது பதவிக்காலம் முழுமையாக பூர்த்தியாகும் வரை பதவியில் இருந்து நாட்டிலும் கட்சியிலும் ஜனநாயக மறுசீரமைப்பை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

149

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடும் போது வெறும் மூன்று பேர் மாத்திரமே பிரசன்னமாகி இருந்தனர்.

1.32 என்ற சுபநேரத்தில் ஜனாதிபதி அறிவிப்பில் கையெழுத்திட்டார். ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அவரது பணிக்குழுவின் தலைமை அதிகாரி காமினி செனரத் மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ ஆகியோரே அங்கு இருந்தனர்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக தனது பெயரை முன்மொழியுமாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஏ.எச்.எம். பௌசி, சீ.பி. ரத்நாயக்க ஆகியோர் வழிமொழிந்தனர். குறைந்தது மகிந்த ராஜபக்ஷவை வழிமொழிந்த அமைச்சர்கள் இருவர் கூட இன்று நடைபெற்ற கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

அதேவேளை நேற்று இரவு நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லாது பதவிக்காலம் முழுமையாக பூர்த்தியாகும் வரை பதவியில் இருந்து நாட்டிலும் கட்சியிலும் ஜனநாயக மறுசீரமைப்பை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

தனது கருத்தை ஏற்காது இன்று தேர்தல் அறிவிப்பில் ஜனாதிபதி கையெழுத்திட போவதாக அறிந்து கொண்ட நாமல் ராஜபக்ஷ, தனது செல்போனை அனைத்து விட்டு கொழும்புக்கு வெளியில் சென்று விட்டதமாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE