இயக்குனர் ருத்ரய்யா காலமானார் 

72 பிரபல இயக்குனர் ருத்ரய்யா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67.கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த ருத்ரய்யா, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று காலை நடக்கிறது. மறைந்த ருத்ரய்யாவுக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும் திலீபன் என்ற மகனும் கங்கா என்ற மகளும் உள்ளனர். கங்கா கனடாவில் வசிக்கிறார்.ரஜினி, கமல், ஸ்ரீபிரியா நடித்த ‘அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கியவர் சி.ருத்ரய்யா. தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் அது பேசப்பட்டு வருகிறது. அடுத்து ‘கிராமத்து அத்தியாயம்’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார். ருத்ரய்யாவின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

 

SHARE