மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்படுவது உறுதி – இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கு கோத்தபாய தயாராகிறார்.

148

 

இராணுவ ஆட்சியைத் தவிர மஹிந்தவால் ஒரு துரும்பும் நகர்த்தமுடியாது என்று இன்று பரவலாக பேசப்பட்டுவருகின்றது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை வைத்து இராணுவப் புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாக புலனாய்வு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. செய் அல்லது செத்துமடி என்று தலைவர் பிரபாகரன் கூறியதைப் போன்று இன்று மஹிந்த ராஜபக்ஷவின் நிலைமையும் அவ்வாறே மாறிவிட்டது. குடும்ப அரசியல் செய்ததன் மூலமும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை செயற்படுத்தியமையுமே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் செய்த பாரிய பிழையாகும்.

சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கக்கூடிய உயர்மட்ட அதிகாரிகளுடன் இரகசியப் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டு ஆட்சியமைப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நிச்சயம் மஹிந்தவும், அவரது குடும்பமும், சகாக்களும் சிறையில் இருக்கவேண்டிய நிலையேற்படும். இதனை தடுத்து நிறுத்த மஹிந்த அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இல்லையெனில் அடுத்த இராணுவத் தளபதியாக சரத்பொன்சேகா நியமிக்கப்படுவார். நிலைமை மேலும் மோசமடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இராணுவ ஆட்சி அமைப்பது குறித்து பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆராய்ந்து வருவதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Gotabaya_2  Group-Photo-Minister-Gotabaya-Rajapaksa-and-HC-and-Col-Shaheryar z_vpg12-Intelligence2

 

THINAPPUYAL NEWS

SHARE