சுகாதார அமைச்சர் மைத்திரிபாலவையும் சிறையில் அடைக்கக் கூடும்: சரத் பொன்சேகா

132

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையும் சிறையில் அடைக்கக் கூடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மாற்றுக் கொள்கையாளர்களை பழிவாங்க முயற்சிக்கின்றது.

மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு முற்று முழுதாக அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மைத்திரிபாலவுடன் குரோத உணர்வுடன் செயற்படுகின்றனர்.எவ்வாறு மைத்திரிபாலவிற்கு எதிராக வழக்குத் தொடர்வது என யோசிக்கின்றார்கள்.

எவ்வாறு வெலிக்கடை  சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்பது என்பது பற்றி திட்டமிடுகின்றார்கள்.

சில வேளைகளில் நான் சிறையில் தூங்கிய அதே மேசையில் மைத்திரிபாலவும் தூங்க நேரிடலாம்.

எனவே இப்போதே உடற்பயிற்சி செய்து உடலை தெம்படையச் செய்து கொள்வது நல்லது.

ஆளும் கட்சியின் ஒரு தொகுதியினருக்கு இன்று புத்தி தெளிந்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய எனது சாதாரண தர வகுப்புத் தோழர் ராஜித, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோருக்கு நன்றி பாராட்டுகின்றேன்.

எவ்வாறெனினும் எமது கட்சியின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடிய வகையிலான மேடைகளில் ஏறப் போவதில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

SHARE