ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 நாள் பயிற்சி ஆட்டம்: வருண் ஆரோன் அபாரம்

107
இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் பங்குபெறும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய சென்றுள்ளது.இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 4–ந்திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.

அதன்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெவன் அணியுடன் இந்திய அணி மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம் அடிலெய்டில் இன்று தொடங்கியது.

ஆஸ்திரேலிய லெவன் ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வேகப்பந்து வீரர்கள் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலிய லெவனுக்கு தொடக்கத்தில் நெருக்கடி கொடுத்தனர்.

52 ரன் எடுப்பதற்குள் ஆஸ்திரேலயா லெவன் 3 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் ஷார்ட் ரன் எதுவும் எடுக்காமல் புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். கேப்டன் டர்பனர் 29 ரன்னிலும், ஸ்டீவென்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் வருண் ஆரோன் பந்தில் ‘அவுட்’ ஆனார்கள்.

மற்றொரு தொடக்க வீரரான கார்ட்டர்ஸ்– சுமித் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

SHARE