இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்-பதற்றநிலை தொடர்கிறது

127

இராணுவ அழுத்தங்களுக்கு மத்தியிலும், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இன்று முல்லைத்தீவில் குறித்த ஓரிடத்தில் மாலை 6 .04 மணியளவில் சுடரேற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்தார்.

ரவிகரனுடன் மாவீரர் குடும்ப அங்கத்தவர் ஒருவர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இது பற்றி கருத்துத் தெரிவித்த ரவிகரன்,

மறவர்கள் சிந்திய ரத்தம் எங்கள் கடல் நீரில் கலந்தே இருக்கிறது. அந்த நீரைப் பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள். அவர்களின் உடல்கள் எம் மண்ணுடன் கலந்து விதையாயிருக்கின்றன. அங்கே முளைக்கும் தாவரங்களைத்தான் நாம் உண்கிறோம். அவர்களின் எண்ண அலைகள் இன்றும் எம் பிரபஞ்சத்திலே நிறைந்தே இருக்கின்றன.

அவற்றைத்தான் எம் மக்களின் எண்ணங்கள் ஈர்க்கின்றன. இப்படிக் காற்றிலும் கடலிலும் விண்ணிலும் நிறைந்து, உணவிலும் நீரிலும் எண்ணத்திலும் எம்மக்களோடும் எம் மண்ணோடும் இரண்டறக்கலந்த மாவீரர்களை எம்மிடம் இருந்து எப்படிப் பிரிப்பது?

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது, உலகின் அடிப்படை மனித நாகரீகம். அந்த பொது நாகரீகத்தையே எம் மக்கள் இன்று நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இனியும் நிலை நிறுத்துவார்கள் என்றார்.

ravikaran1

SHARE