இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தை தம்மால் மாத்திரமே ஒழிக்கமுடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

134
இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தை தம்மால் மாத்திரமே ஒழிக்கமுடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிப்பதால் அதனை தம்மால் மேற்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிரான பிரசாரங்களுக்கு நிறைவேற்று அதிகார ஒழிப்பு மாத்திரமே காரணமாக இருந்தால் அதனை தம்மால் மாத்திரமே செய்யமுடியும் என்று எதிர்த்தரப்பினர் கருதுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயங்களை ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டது எனினும் அதில் எதிர்க்கட்சி பங்கேற்கவில்லை என்பதையும் ஜனாதிபதி குறைகூறினார்.

 

SHARE