பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக வவுனியா, சிதம்பரபுரம் பெண்கள் வள நிலையத்தின் ஏற்பாட்டில் ஊர்வலம்

117

பெண்களின் நலனனில் அக்கறை கொள்வது நல்லது தழிழர் கலாச்சாரத்திற்கு
ஒவ்வாத ஆடைகளை உடுக்கும் பெண்களை இனம் கண்டு திருத்துதற்கான
வளி முறைகளை கையாழுமாறும் தினப்புயல் பத்திரிகை கேட்டுக்கொள்கிறது

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக வவுனியா, சிதம்பரபுரம் பெண்கள் வள நிலையத்தின் ஏற்பாட்டில் ஊர்வலம் ஒன்று வவுனியா நகரில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக பெண்கள் வள நிலையம் ஆனது 16 நாள் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக வவுனியா நகரில் பெண்களுக்கு மீதான வன்முறைக்கு எதிரான ஊர்வலம் வவுனியா நகரில் பிரதான வீதி வழியாக வந்து நகரசபை வளாகத்தை சென்றடைந்தது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்போம், வன்முறைகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம், பெண்கள் நாட்டின் கண்கள், பெண்களை தாயாய் சகோதரியாய் நினையுங்கோ போன்ற கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

a1

a2

SHARE