எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் TNA முடிவும் வடமாகாண சபையின் முடிவும் மைத்திரிபாலவிற்கே இறுதி தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும்

130

கூட்டமைப்பின் பணிமனையான கிளிநொச்சி அறிவகத்தில் இன்று தமிழ் தேசிய கட்சியின் கிளிநொச்சி  மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள், நிர்வாகிகள், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

603709_287097224785424_3644788635564763874_nபா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிளிநொச்சி மாவட்ட மக்களின் கருத்துக்கள் எவ்வாறாக இருக்கின்றது என்பது தொடர்பாக மாவட்டத்தில் பல்வேறு நிலைகளிலும் கட்சி பணியாற்றுகின்ற பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் பெறப்பட்டது.தற்போது இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு இலங்கை அரசியல் சூடு பிடித்திருக்கின்றது. தென்னிலங்கையில் இரண்டு பெரும் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் பலப் பரீட்சையில் இறங்கியுள்ளன.

ஆளும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து முக்கிய அரசியல் தலைவர்கள் பொது எதிரணியில் இணைந்து பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளராக மூன்றாவது தடவை ஜனாதிபதி ஆவதற்காக மகிந்த ராஜபக்ச களம் இறங்கியுள்ள நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் ஊடக விவாதங்கள் என்பன பரவலாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் கருத்தும் நிலைப்பாடும் எவ்வாறு அமையப் போகின்றது என சர்வதேச இராஜதந்திரிகளும் அவதானிகளும் இலங்கை ஜனாதிபதி தேர்தலை நோக்கி தங்கள் கரிசனையை திருப்பியுள்ளனர்.

இந்த ஜனாதிபதி தேர்தல் தமிழர்களை மட்டுமல்ல சிங்கள மக்களை பொறுத்தமட்டிலும் மிக முக்கியமான தேர்தலாக எதிர்கொள்ளப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்குத் தமிழர்களின் தலைமைச் சக்தியாக விளங்கக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி அறிய மக்களும் சிங்கள கட்சித்தரப்புகளும் ஆவலாய் உள்ளன.

இந்த நிலையில் மக்கள் கருத்துக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் பெற்று வருகின்றனர்.

இந்தவகையில் கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மக்களிடம் உள்ள கருத்துக்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்கள் தீர்மானங்களை இறுதி நேரத்தில் தெரிவிக்காது கால அவகாசத்தோடு தெரிவிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எத்தகைய நிலைப்பாட்டை எடுத்தாலும் தமிழ் மக்கள் மாற்றத்திற்கான சக்திக்கே வாக்களிப்பார்கள் எனவும் அது மைத்திரிபால சிறிசேனாவுக்கான ஆதரவாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் வாழ்க்கையை அடக்கு முறைக்குள் வைத்திருக்கும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை ஒழித்துக்கட்ட வேண்டுமெனவும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் மக்கள் கருத்திருப்பதாக கூறப்பட்டது.

பொது எதிரெணி வேட்பாளரான தைத்திரிபால சிறிசேனாவோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு காத்திரமான ஒரு ஒப்பந்தந்தை தமிழர்களின் அபிலாசைகள் தொடர்பாக ஏற்படுத்திய பின் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது எதிரணியோடு செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம் 31வது திருத்தச்சட்டம் பற்றிய வரையறைக்குள் இருந்தால் அது ஜனாதிபதியாக மைத்திரிபால வெல்லும் பட்சத்தில் தமிழர் உரிமைகள் 13க்குள் முடக்கப்பட கூடுமெனவும் கூறப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவர் வென்றாலும் அதனால் தமிழர்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை.

இது தேர்தல்களுக்கு முன்னதாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏற்படுகின்ற மாயை அதுவே இப்போதும் நடக்கின்றது. சிங்கள பேரினவாத மனோபக்குவம் வளர்க்கப்பட்டு அது கண்கள் மறைத்தபடி நிற்கின்றது.

ஆனாலும் இப்பொழுது மகிந்த ஜனாதிபதி கதிரையில் இருந்து இறக்கப்பட வேண்டிய ஒருவாராக காணப்படுகின்றார் என மக்கள் எண்ணுவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச மயப்பட்டுவிட்டது. இனி தீர்வு இங்கிருந்து அல்ல அது சர்வதேசத்திடமிருந்து அது ஒரு வேறுவடிவில் வரக்கூடிய சாத்தியமே அதிகம்.

எனவே இந்த ஜனாதிபதி தேர்தலில் புலம்பெயர் சமுகத்தின் கருத்தும் நிலைப்பாடும் முக்கியமானது. அதேவேளை இலங்கை தொடர்பாக பிராந்திய வல்லரசான இந்தியா மற்றும் மேற்குலக வல்லாண்மை அரசுகளின் நிலைப்பாடுகளை ஒட்டியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானங்களும் எடுக்கப்பட வேண்டுமென மக்கள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த வேட்பாளர் வென்றாலும் தோற்றாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவாகவும் தெளிவாகவும் தங்கள் தீரமானத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேற்படி கருத்துக்கள் மக்களிடம் நிலவுவதாக கிளிநொச்சி அறிவகத்தில் நடந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட போதும் ஒட்டுமொத்த மக்களின் ஒருமித்த கருத்துக்கள் மேலுமொரு கலந்துரையாடலில் பெறப்பட்டு வெளியிடப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Sampanthan Sumanthiran Chandrika Ranil Fonseka

 

SHARE