பேரினவாதியாக தன்னை சித்தரித்துள்ள மைத்திரிக்கு தழிழ் மக்கள் வாக்களிப்பதா?-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது

102
நானும் பேரினவாதி தான்! மைத்திரிபால
DSC_1ff263s2f138 070610_sinha_pic_002 (1)தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தவிர பௌத்த மதத்திற்கு அரசியல் சாசனத்தில் பிரதான இடம் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பௌத்த துறவிகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடனான தேர்தல் ஒப்பந்தத்திலேயே மேற்குறித்த இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

மேலதிக அதிகாரங்களுடன் கூடிய மாகாண சுயாட்சி முறைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுக்கான வழிமுறையாக முன்வைத்தனர். அதனை மைத்திரிபால சிரிசேன ஜாதிக ஹெல உறுமையவுடனான ஒப்பந்தத்தில் நிராகரித்து தானும் ராஜபக்சவிற்கு இணையான பௌத்த சிங்கள பேரினவாதி எனக் கூறியுள்ளார்.

சிங்கள மக்கள் மத்தியிலிருந்து குறிப்பிடத்தக்க எந்தக் கட்சிகளும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக்கொண்டு அதனை மக்கள் மயப்படுத்தவில்லை.

தேர்தல் நோக்கில் தமது தொகுதித் தமிழர்களின் வாக்குகளை வாங்கிக் கொள்வதற்காக விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற புறக்கணிக்கத்தக்க தனி நபர்கள் சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக்கொள்வதாகப் பேச்சளவில் ஒத்துக்கொள்கின்றனர்.

இடதுசாரிக் கட்சி எனக் கூறும் பேரினவாதக் கருத்துக்களைக் கொண்டிருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்றவை மாநில சுயாட்சியைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

இலங்கை அதிகாரவர்க்கம் சிங்கள தமிழ் முரண்பாட்டை ஆழப்படுத்துவதன் ஊடாகவே ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை மைத்திரிபால சிறிசேன உட்பட்ட அனைத்து வாக்குப் பொறுக்கிகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.

இவர்களின் பேரினவாதக் கருத்தியலுக்குத் துணை செல்லும் வகையிலேயே ஏகாதிபத்தியங்களால் தேசிய விடுதலைப் போராட்டம் அப்பாவிச் சிங்கள மக்களுக்கு எதிரான யுத்தமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது.

சில தமிழ் கட்சிகள் எங்களோடு கூட்டு சேர்ந்துள்ளது, அவர்களுக்கு எமது நிலைப்படை தெளிவாக கூறியுள்ளோம்.

மஹிந்த எந்த வழியில் வழி நடத்தினரோ அதே போன்றுதான் எனது நிலைப்பாடும் தமிழர்கள் விடயத்தில் இருக்கும்.

நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது கட்சி ரீதியாகவோ தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு தருமாறு கேட்கவும் இல்லை.

இந்த தேர்தல் குறிப்பாக எமது சிங்கள மக்களின் நலனுக்காகவே தவிர தமிழர்களின் தீர்வுக்கானதல்ல.

சிங்கள உழைக்கும் மக்களுக்கும், ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து பிரிந்து செல்லும் உரிமைக்கான வேலைத்திட்டம் முன்வைக்கப்படும் வரை இரண்டு பக்க இனவாதிகளும் பிழைப்பு நடத்துவார்கள்.

தேர்தலுக்கு முன்னதாகவே தானும் இனவாதி எனக் கூறும் மைத்திரிபால சிறிசேன, ராஜபக்சவிற்கு மாற்று அல்ல, ராஜபக்சவின் பிரதியீடு.

ஒட்டு மொத்தத்தில் எவன் வந்தாலும் தமிழனுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.

தனது இனத்துக்காக ஒன்று சேர்ந்துள்ள சிங்கள பேரினவாதிகளுடன் எமது சில தமிழ் தலைமைகளும் கூட்டு.

அவர்கள் அனைவரும் ஒன்று சேரும் போது மாயாஜால தமிழ் அரசியல் தலைமைகள் ஏன் ஒன்று சேரக் கூடாது.

இனியும் முட்டாள்கள் ஆனால் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல் போகும் அளவுக்கு நிலைமை மாறிவிடக் கூடும்.

அவர்கள் செய்வது போன்று ஒரு தடவை தமிழர்கள் ஒன்று சேர்ந்து பாருங்கள் எந்தளவு மாற்றத்தை உண்டு பண்ண முடியும் என்று.

சிந்தித்து செயற்பட்டால் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும், பணத்துக்கும் பதவிக்கும் சொந்த நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யாதே தமிழ் தலைமைகளே.

 

SHARE