முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும்-எவ்வளவு அடிச்சாலு திட்டினாலும் சூடு சொரண கொஙஞ்சமும் இல்ல

122

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் சீரான முறையில் இடம்பெறுகின்றன.

ஏற்கனவே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தநிலையில் அந்தக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதில் தொடர்பில் தீர்மானிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது கிழக்கு மாகாணசபை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை அரசாங்கத்தில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலகிச் சென்றமை குறித்து அரசாங்கம் கவலையடைவதாக அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக்கருத்துக்களை குறிப்பிட்டார்.

 

SHARE