யாழ்ப்பாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய ரொஹான் டயஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

122
யாழ்ப்பாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய ரொஹான் டயஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதேவேளை பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வித்தியாலங்கார யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டத்திற்கு அமைய அரச அதிகாரிகள் எவருக்கும் இடமாற்றங்களை வழங்க முடியாது. இந்த நிலையில், தேர்தல் ஆணையாளரின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்

 

SHARE