கோத்தபய ராஜபக்ஸ மற்றும் ரவூப் ஹக்கீமுக்கு இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது-“ஹக்கீம்” உடனடியாக வெளியேறவும் மகிந்த எச்சரிக்கை…..

115

நேற்று திங்கட்கிழமை, 8 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்தினை ஏற்றுக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஸ அதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

ரவூப் ஹக்கீம் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஸவை சூழ மற்றும் சில அமைச்சர்களும், ஆளும்கட்சி எம்.பி.க்கள் பலரும் உடனிருந்துள்ளனர். இதன்போது மஹிந்த ராஜபக்ஸ, ரவூப் ஹக்கீமிடம் ‘முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துவிட்டதா..’  என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள ரவூப் ஹக்கீம், முடிவெடுப்பதில் முஸ்லிம் காங்கிரஸில் சிக்கல் நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸ ரவூப் ஹக்கீமிடம் சீறிப்பாய்ந்துள்ளார்.

அதாவது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முஸ்லிம் காங்கிரஸிற்கோ, ரவூப் ஹக்கீமுக்கோ விருப்பமில்லையென்றால் உடனடியாக வெளியேறலாம். ஹக்கீமாகிய உமக்கு முஸ்லிம் காங்கிரஸினை கட்டுப்படுத்த முடீயாதுள்ளது. என்னுடன் பம்மாத்து காட்ட வேண்டாம். உடனடியாக முடிவை அறிவிக்கவும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ மிகக்காட்டமாக ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்னும் சொற்தொடர்களும் இதன்போது மஹிந்த ராஜபக்ஸவின் உபயோகிக்கப்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டுள்ள எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி இம் முறன் பாட்டினைத் தொடர்ந்து

இதனையடுத்தே நேற்று பிற்பகல் கோத்தபய ராஜபக்ஸ மற்றும் ரவூப் ஹக்கீமுக்கு இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயங்களுக்கு உத்தரவாதம் கிடைக்கப்பெற்றுள்ளது என்ற தோற்றப்பாடு உருவாகும் வகையில் முஸ்லிம் காங்கிரஸினால் அவசரமாக ஊடக அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.

இதன்மூலம் இன்று செவ்வாய்கிழமை (09-12-2014) நடைபெறவுள்ள முஸ்லிம் காங்கிரஸின் முக்கியத்துவமிக்க அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது, எனவே  ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக செயற்பட வேண்டுமென ஒருசாரார் வலியுறுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று செவ்வாய்கிழமை, 9 ஆம் திகதி, காலை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அதிகாரிகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு முக்கிய பேச்சுககளில் ஈடுபடவுள்ளது. இதன்போது கிடைக்கப்பெறும் வாக்குறுதிகளை கொண்டு, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுவிடலாமென்வும் சிலர் கணக்கு போட்டுள்ளனர்.

எனினும் ஜனாதிபதியினால் சிறப்பு வர்த்தகமானி மூலம் முழுமையான கரையோர மாவட்டம் உடனடியாக பிரகடனப்படுத்தபட்டால் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவுக்கு ஆதரவளிக்கலாம் எனவும், வாய்மூலம் வாக்குறுதிகளை நம்பி, மஹிந்தவுக்கு ஆதரவளிக்க முடியாதெனவும் உயர்பீட உறுப்பினர்களில் சிலரின் வாதமாகும். இல்லாதவிடத்து தாம் கட்சிக்கு தனித்து இயங்குவதாக வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஸவின் சீற்றத்திற்கு, ரவூப் ஹக்கீம் அடிபணிந்தாரா இல்லையா என்ற விபரம் இன்னும் சில தினங்களில் நம்மால் அறிந்துகொள்ளமுடியும்.

SHARE