ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவை எல்லாம் சகஜம் தான்

97
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தமது செயலாளர் பதவியில் இருந்து விலகும், கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.

எனினும் ரணில் விக்கிரமசிங்க இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பதவி விலகல் கடிதத்தை திஸ்ஸ அத்தநாயக்க சமர்ப்பித்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

திஸ்ஸ ஐ.தே.க வில் இருந்து இராஜினாமா!

கண்டி மாவட்ட பா.உறுப்பினரும், ஐ.தே.க பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தனது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இவர் ராஜபக்சவிற்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தலில் செயற்படப் போவதாக தெரியவருகின்றது.

இவருக்கு சுகாதார அமைச்சு பதவியுடன் வேறு ஒரு அமைச்சும் வழங்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது.

இதேவேளை ஐ.தே.க.வின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சந்திராணி பண்டாரவும் கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சியில்  இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்த பின்னர் மஹிந்த ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இன்று காலை தமது பதவி விலகல் கடிதத்தை திஸ்ஸ அத்தநாயக்க கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்த போதும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் திஸ்ஸ அத்தநாயக்கவின் கருத்து எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

 

SHARE