திகாம்பரம், இராதாகிருஷ்ணன் அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்தனர்

81
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் பழனி திகாம்பரம், தனது ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியா தோட்ட மக்களின் நலன் தொடர்பில் இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மலையக அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு நிகரான சலுகைகள் தனது பிரதியமைச்சுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். இதனடிப்படையில் தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜினாமா கடிதம் தொலைநகல் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று மாலை எதிரணியில் இணைவு!

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பங்காளி கட்சியாக அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் வகையில் இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் தாவரவியல் பொது பொழுதுபோக்கு பிரதி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது பதவி விலகல் கடிதங்களை தயார்படுத்தி வைத்துள்ள நிலையில் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையக மக்களின் காணி, தனி வீட்டுப் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து இவர்கள் அரசாங்கத்தை விட்டு விலகத் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை 3.30 மணிக்கு எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மைத்திரிபாலவுக்கு தங்களது ஆதரவை அறிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

SHARE