ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள போலி இணையத்தளங்கள்

112
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து போலி இணையத்தளங்களும் சமூக வலைத்தள கணக்குகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அதுல புஸ்பகுமார நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளா சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து இணையத்தளங்களும், சமூக வலைத்தள கணக்குளும் மூன்று வார காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட போலி இணையத்தளங்களைப் போன்றே, பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தள கணக்குகளும் ஆயிரக்கணக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

செய்தி மூலங்களைக் குறிப்பிடாத செய்திகள், அவதூறு ஏற்படுத்தும் தகவல்கள் அடங்கிய செய்திகள் இந்த புதிய இணையத்தளங்களில் பரவலாக வெளியாகி வருகின்றன.

இவ்வாறான இணையத்தளங்கள் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமேன அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

SHARE