ஒரு படத்தோடு ஓயமாட்டேன்:சோனாக்ஷி தடாலடி 

88
‘லிங்கா‘ படத்தை முடித்துக் கொடுத்த சோனாக்ஷி சின்ஹா தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க சம்மதிப்பாரா என்ற சந்தேகம் கோலிவுட்டில் பலருக்கு உள்ளது. இதுபற்றி சோனாக்ஷி பதில் அளித்தார்.‘லிங்கா எனது முதல் தமிழ் படமென்றாலும் ஏற்கனவே தென்னிந்திய இயக்குனர்கள் மற்றும் குழுவினருடன் நான் பணியாற்றி இருக்கிறேன். தென்னிந்திய இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா இயக்கிய இந்தி படங்களில் நடித்திருக்கிறேன். இதனால் அவர்களின் வேலைத் தன்மை குறித்து நன்கு அறிவேன். ‘லிங்கா‘வில் நடித்தபோது எனக்கிருந்த ஒரு சவால் தமிழ் வசனம் பேசுவதுதான். ஏற்கனவே தமிழ் பட குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் இதில் எனக்கு உதவியது. சாதனையாளர் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்தது எனக்கு கிடைத்த கவுரவம். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பே எனக்கு கன்னடம், தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. பாலிவுட் படங்களில் பிஸியாக இருந்ததால் ஏற்க முடியவில்லை. லிங்காவோடு என்னுடைய தென்னிந்திய பட உறவை முடித்துக்கொள்ள விரும்பவில்லை. நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதற்கான நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்‘ என்றார்.

 

SHARE