இலங்கை நாட்டின் புலனாய்வுத்துறை அமெரிக்க புலனாய்வுத்துறையினரால் உள்வாங்கப்பட்டுள்ளது.

105

 

இலங்கை நாட்டின் புலனாய்வுத்துறை அமெரிக்க புலனாய்வுத்துறையினரால் உள்வாங்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக இலங்கையின் புலனாய்வுத்துறையினர் சர்வதேச ரீதியாக தமது புலனாய்வு நடவடிக்கைகளை கோட்டைவிட்டு வருகின்றனர். அதிலொரு அங்கமாக மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியிலிருந்து விலகிச்சென்ற மைத்திரிபால உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் அடங்குகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பினை அழிப்பதற்கு இலங்கை புலனாய்வுடன் இணைந்து செயற்பட்ட அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற அரசுகளில் முதன்மை வாய்ந்ததாக அமெரிக்காவின் ஊஐயு யினர் செயற்பட்டனர்.
வேறுபட்டக் கோணங்களில் தற்பொழுது அமெரிக்காவின் புலனாய்வு நடவடிக்கைகள் செயற்பட்டுவருகின்றன. அவர்களுடை புலனாய்வின் முக்கிய விடயம் சீனா, இந்தியா இருவரினதும் வல்லாதிக்கத்தினை இலங்கையில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்பதே. தனக்கு சாதகமான முடிவுகள் எட்டப்படாத வகையிலும் இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் தொடரும். ஆனாலும் அமெரிக்காவின் ஊஐயு புலனாய்வினர் இலங்கையில் வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்துவருகின்றனர். மட்டுமல்லாது விபச்சார விடுதிகள், களியாட்ட விடுதிகள் போன்றவற்றில் புலனாய்வுத் துறையினர்களை சந்தித்து இரகசியங்களை அறிந்து அமெரிக்க உளவு நிறுவனத்திற்கு இதுவரையிலும் தகவல்களை வழங்கிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE