கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிறந்த வெளிநாட்டு வீரர் விருது- பி.பி.சி. வழங்கியது

97
ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியின் முன்னணி வீரரும் போர்ச்சுக்கல் அணி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் சிறந்த கால்பந்து வீரராக திகழந்து வருகிறார். தற்போது இவருக்கு 2014-ம் ஆண்டுக்கான வெளிநாட்டு சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பி.பி.சி. வழங்கியுள்ளது.இதுகுறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறும்போது, ‘‘என்னை சிறந்த வீரராக தேர்ந்தெடுத்ததற்கு பி.பி.சி.க்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், என்னுடைய இங்கிலாந்தின் பழைய ரசிகர்களுக்கும் மிக்க நன்றி’’ என்றார்.

ரொனால்டோ ரியல் மாட்ரிட் கிளப்பில் விளையாடுவதற்கு முன் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடியவர். இவருடன் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் மற்றும் கார்பந்தய வீரர் மார்க் மார்கியூஸ் ஆகியோர் போட்டியில் இருந்தனர். இவர்களை முந்திக்கொண்டு ரொனால்டோ இந்த விருதை பெற்றுள்ளார்.

ரியல் மேட்ரிட் அணிக்காக 27 ஹாட்ரிக் கோல்களும், கடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 17 கோல்கள் அடித்து, இதற்குமுன் 14 கோல்கள் அடித்து சாதனைப் படைத்திருந்த ஜோஸ் அல்டாபினி மற்றும் லயோனல் மெஸ்ஸி சாதனையை முறியடித்துள்ளார்.

ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் 29 வயதான ரொனால்டோ, 267 போட்டிகளில் 281 கோல்கள் அடித்துள்ளார். இந்த வருட சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதையும் பெற்றுள்ளார்

SHARE