அமைச்சர் ரிஷாத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரும் ஓரிரு தினங்களில் ஆளும் தரப்பை விட்டு வெளியேறலாம்…?

113

 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி  கட்சியான அமைச்சர் ரிஷாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு சிகப்பு விளக்கு சமிக்சை காட்டி வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்ற அதேவேளைஇந்த சிகப்பு விளக்கு சமிக்சை காட்டப்படுகிறது ஏன் என்ற தகவல் இன்னும் ஊர்ஜிதமாகவில்லை.

risard-hunais rishad-with-mahinda

முன்னதாக ஆளும் தரப்பில்  அங்கம் வகிக்கும் அமைச்சர் ரிஷாத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனத்தை  அமீரலிக்கு பெற்றுக்கொண்டமை அவர்கள் அரசுக்கு ஆதரவு வழங்குவதை தொடர்வதற்கான பச்சை  சமிச்சை என தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் கூட  அமைச்சர் ரிஷாத் பல தடவைகள்  அக்கட்சியின் உயர்பீடம் மற்றும் புத்திஜீவிகள் என பலரிடம் கருத்து கேட்டு மக்கள் விரும்பும் வகையில் தீர்மானம் ஒன்றை எடுக்க முனைப்பாக இருந்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் தமது கருத்துக்களை முன்வைத்த அதிகமானவர்கள் மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவது  சிறந்தது என அவரிடம் கருத்து தெரிவித்திருந்தனர்.

அதேநேரம் சென்ற  வாரங்களில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி தரப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தது  இதன்போது  முஸ்லிம்கள் சார்பாக மக்கள் காங்கிரஸ் முன்வைத்த முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்,முஸ்லிம்களிடம் பறிக்கப்பட்ட காணிகளை மீள பெற்றுக்கொடுத்தல்,விகிதாசார அடிப்படையில் அரச உத்தியோகத்துக்கு ஆள் சேர்ப்பு ,யுத்தத்தால் ,இன வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு உள்ளிட்ட  ஏழு அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளை யும் தேர்தல் விஞ்ஞாபனத்தில்  சேர்த்துகொள்வதாகவும் அதனை அமுல்படுத்துவதாகவும் ஆளும் தரப்பு உறுதியளித்திருந்தது.

அதேவேளை இன்று உள்ள அரசியல் சூழ்நிலையில் ஆளும் தரப்பு வழங்கும் வாக்குறுதிகள் வெற்றிபெற்ற பின்னர்  நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியும் அக்கட்சி தலைமைகளிடம்  பரவலாக இருந்து வருகிறது. இது தவிர முஸ்லிம் காங்கிரசுக்கு அடுத்தபடியாக பாராளுமன்ற ,மாகாண சபை உறுப்பினர்களை கொண்டுள்ள பிரதான முஸ்லிம் கட்சியான மக்கள் காங்கிரஸ் தலைவருக்கு இருந்த நற்பெயரும் நாடு தழுவிய ரீதியில் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையிலும் அமைச்சர் ரிஷாத்தின் கோட்டை என கருதப்படும் முல்லைதீவில் இன்று நண்பகல்  இடம்பெற்ற ஜனாதிபதியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர்  கலந்து கொள்ளவில்லை அது தவிர காத்தாங்குடியில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தலைமையில் நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி கலந்துகொள்ளும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் ரிஷாத் கலந்துகொள்ளமாட்டார் என ஊர்ஜிதமான  தகவல்கள் உள்ளன .

மேலும் கடந்த சில தினக்களுக்குள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அநேகமாக அரசாங்கத்துடன் தங்கும் என்ற வகையில் சமிச்சைகள் வெளியாகியுள்ள நிலையில் அமைச்சர் ரிஷாத் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷத்தின் இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கு அமைச்சர் கட்டும் சிகப்பு சமிக்சை என தெரிகிறது.

இது தவிர அமைச்சர் ரிஷாத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரும் ஓரிரு தினங்களில் ஆளும் தரப்பை விட்டு வெளியேறும் என செய்திகள் பரவத்தொடங்கியுள்ளன .மக்கள் காங்கிரஸ் ஆளும் தரப்பை விட்டு வெளியேறினால் அக்கட்சிக்கு சிறு அளவிலான சேதாரம் ஏற்படும்அது  கணக்கில் எடுக்கமுடியாதது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

SHARE