இழப்பை சந்திக்கும் இலங்கை அணி

90
இலங்கை அணியின் மூத்த வீரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வு முடிவால் இலங்கை அணி பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.சர்வதேச ஒருநாள் இருந்து அரங்கில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தனே ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடரோடு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளனர்.

மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இருவருக்கும் தங்கள் சொந்த மண்ணில் கடைசி போட்டியாக அமைந்தது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்ட் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இரட்டை சகோதரர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோர் இலங்கை கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய இரு தூண்கள் ஆவர்.

இவ்விருவரும் நாட்டின் சுமையை தன் மீது சுமந்து அணிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

மேலும் தனது விளையாட்டுத் திறமையாலும் அர்ப்பணிப்பாலும் நாட்டு மக்களை ஒவ்வொரு தடவையும் மகிழச் செய்துள்ளனர்.

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஓய்வு பெற்றதன் பின்னர் அவர்களின் இடைவெளியை நிரப்புவது மின கடினமான விடயமாகும். எனவே இவர்களின் ஓய்வு மிகப்பெரிய இழப்பாகும் என்று கூறியுள்ளார்.

SHARE