பிரம்மாண்டத்தின் உச்சம் ஐ

81

இந்திய திரையுலகமே நேற்று இரவு 10 மணிக்கு சமூக வலைத்தளத்தையே முறைத்து பார்த்து கொண்டிருந்தது. எப்ப தான் ஐ ட்ரைலர் வரும் என, படக்குழு அறிவித்தது போலவே சரியாக 10 மணிக்கு வந்தது ட்ரைலர்.

ரசிகர்கள் ஆவலை சிறிதளவும் ஏமாற்றாமல் பிரம்மிப்புடன் இருக்கிறது ட்ரைலர். டீசரின் ஆரம்பத்திலேயே விக்ரமின் கோர முகத்தை காட்டிய ஷங்கர், இந்த முறை ட்ரைலரில் அவரின் ஸ்டைலிஸ் தோற்றத்தை காட்டி அசத்தியுள்ளார்.

எமி ஜாக்ஸனும் மாடல் என்பதால் கச்சிதமாக படத்தில் பொருந்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கலர்புல் பாடல் காட்சி, அதிரடி சண்டைகாட்சி என அசரடித்துள்ளார் ஷங்கர்.

இதற்கெல்லாம் மேலாக பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, இத்தனை வருட மொத்த அனுபவத்தை செதுக்கியுள்ளார் இந்த படத்தில் என்று மட்டும் தெரிகிறது. அதற்கு பக்கபலமாக ஏ.ஆர்.ரகுமானின் இசை ரசிகர்களுக்கு அடுத்த வருடம் செம்ம விருந்து தான்.

‘உனக்கு என்ன வேனும், என்னய என்ன கொலை பண்ண போறியா’? என்று எமி கேட்கும் இடத்தில் அதற்கும் மேல என்று விக்ரம் தன் கனத்த வாய்ஸில் கூறுவது ஒரு டப்பிங் விஷயத்தில் கூட இவர் தான் எல்லோருக்கும் சீயான். கண்டிப்பாக தமிழ் சினிமாவில் மைல் கல் ’ஐ’யாக தான் இருக்கும் என்பதில் எந்த ‘ஐ’யமும் இல்லை.

SHARE