யுவனின் இன்னிசை மழையில் இடம் பொருள் ஏவல் பாடல்கள் விமர்சனம்

92

சினிமாவில் இது போன்று நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பவர்களுக்காகவே யுவன் -வைரமுத்து முதன் முறையாக இணைந்திருக்கும் படம் தான் இடம் பொருள் ஏவல். இந்த பாடல்களை பற்றிய சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி

1)அத்துவான காட்டுக்கு-யுவன் ஷங்கர் ராஜா

யுவன் இசையமைத்தால் அந்த பாடலில் எதை தேடுகிறோமோ, இல்லையோ யுவன் பாடியிருக்கிறாரா என்று தேடுவோம், அவர்களுக்காக தன் ஈரக்குரலால் தாலாட்டியிருக்கிறார். அதற்கு வைரமுத்து வரிகள் அச்சாணி போல் சுழல்கிறது. கண்டிப்பாக யுவன் குரலில் வந்த பாடல்களின் இந்த அத்துவான காடு ஸ்பெஷல் தான்.

இப்பாடலை பாட விரும்புவர்கள் க்ளிக் செய்யவும்

2)ஈரக்காத்தே- அனிதா

யுவனிடம் பலரும் எதிர்ப்பார்ப்பது மெலடி பாடல்களை தான். அதற்காகவே ஸ்பெஷலாக வந்துள்ளது ஈரக்காத்து. ஈரக்காத்து அடித்தால் எத்தனை சுகமாக இருக்குமோ அத்தனை சுகமாக இருக்கிறது அனிதாவில் குரலில் இந்த பாடல் வருகையில்.

3)எந்த வழி- வைக்கம் விஜய லட்சுமி

எல்லோரும் பாடலாம் ஆனால், ஒரு சிலர் பாடினால் தான் அந்த பாடலுக்கு ஒரு வகையான உயிர் கிடைக்கும். தொலைத்த பயணத்தை தேடி செல்வது போல் வரும் இந்த பாடலின் வரிகளை கேட்கையில் வைரமுத்துவின் இத்தனை ஆண்டு அனுபவம் அழகாக தெரிகிறது. வைக்கம் விஜய லட்சுமியின் குரல் இன்னும் பல ஆண்டுகள் திரையுலகில் ஒலிப்பதற்கு இந்த பாடல் ஒன்றே சான்று.

4)கொண்டாட்டமே-ஸ்ரீராம் பார்த்தசாரதி

ஆனந்த யாழை பாடலுக்கு பிறகு யுவனுக்காக ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடிய பாடல். இப்பாடலில் யானை பலம் வைரமுத்து வரிகளையே சாரும். வியர்வைகள் எல்லாம் வெற்றி பெறுவதில்லை, வியர்வை இன்றி வெற்றிகள் இல்லை போன்ற வரிகள் வாழ்க்கையில் துவண்டு இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பூஸ்ட் வகையான பாடல்.

5)குருந்தொகை-வி.வி.பிரசன்னா, சோனியா

யுவன் காதல் பாடல்களுக்கு என்றுமே ஸ்பெஷல் தான். அந்த வகையில் வழக்கம் போல் புகுந்து விளையாடியுள்ளார் மனுஷன். இந்த பாடலில் மிகவும் நம்மை ஈர்ப்பது சோனியாவில் குரல் தான். மிகவும் ரம்மியமாக உள்ளது.

6)வையம்பட்டி- ஆண்டனிதாசன், ப்ரியதர்ஷினி

படத்தின் மொத்த கதையையும் இந்த ஒரே பாடலில் கூறியிருக்கிறார் வைரமுத்து. மலைக்கு போய் மொட்டை போடுகிறீர்கள், ஏன் மலைக்கே வந்து மொட்டை அடிக்கிறீர்கள் போன்ற வரிகள் காடுகளை அழிக்க நினைப்பவர்களுக்கு நெத்தியடி. இதற்கு மிக யதார்த்தமாக பொருந்தியிருக்கிறது ஆண்டனிதாசன், ப்ரியதர்ஷினி குரல்கள்.

மொத்தத்தில் எங்க போனீங்க யுவன் என்று எல்லோரும் தேடிய நிலையில் அனைவரும் எதிர்ப்பார்த்தது இந்த யுவனை தான். அப்படி ஒரு கிராமிய இன்னிசை ஆல்பத்தை கொடுத்திருக்கிறார். யுவனின் மாஸ்டர் பீஸ்களான 7ஜி, கற்றது தமிழ், காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களின் வரிசையில் கண்டிப்பாக இந்த இடம் பொருள் ஏவலும் இடம்பெறும்.

SHARE