ஜனவரி 9ல் நடக்கப் போவது என்ன?

99

அடுத்­த­ மாதம் நடக்­க­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச தோல்­வியைத் தழு­வினால் என்ன நடக்கும் என்­பது பற்­றிய விவா­தங்கள் இப்­போதே தொடங்கி விட்­டன.

அர­சியல், ஊடக வட்­டா­ரங்­களில் மட்­டு மன்றி, தேர்தல் பிர­சார மேடை­க­ளிலும் இது­பற்றி சிலா­கிக்­கப்­ப­டு­கி­றது.

எதி­ர­ணியின் பொது­ வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­சார மேடை­களில், ஊழல் செய்­த­வர்கள் நாட்டை விட்டுத் தப்­பி­யோ­டாத வகையில், வரும் ஜன­வரி 8ம் திகதி நள்­ளி­ர­வுடன் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை மூடப் போவ­தாக கூறி­யி­ருந்தார்.

அத்­த­கைய கட்­டத்தில் இந்­தி­யாவோ அல்­லது வேறு நாடு­களோ, அவரைக் காப்­பாற்ற முனையக் கூடாது என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

இன்­னொரு பக்­கத்தில் தாம் தோல்­வி­யுற்றால், சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் கொண்டு போய் நிறுத்­து­வ­தற்கு, புலம்­பெயர் தமி­ழர்­களும் புலி­களும், சர்­வ­தேச சக்­திகளும், மட்­டு­மன்றி உள்­ளூ­ரி­லுள்ள சிலரும் முயற்­சி­களை மேற்­கொண்­டுள்­ள­தாக, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச மேடை மேடை­யாக கூறி வரு­கிறார்.

என்­றாலும், தாம் ஒரு போதும் நாட்டை விட்டு ஓடப் போவ­தில்லை என்றும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச பிர­சார மேடை­களில் நம்­பிக்­கை­யூட்ட முனை­கிறார்.

இறுக்­க­மான போட்­டி­யொன்று நில­வு­கின்ற சூழலில், யார் பக்கம் வெற்றிக் காற்று வீசும் என்று சரி­யாக உய்த்­து­ணர முடி­யாத ஒரு நிலை தான் இப்­போது உள்­ளது.

இந்­த­நி­லையில், எப்­போ­துமே வெற்­றியைப் பற்­றியே பேசி வந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச, தோல்வி குறித்தும், தோல்­விக்குப் பிந்­திய நிலை குறித்தும் பேச ஆரம்­பித்­தி­ருப்­பது முக்­கி­ய­மா­னது.

அதா­வது, தமது வெற்­றியின் மீது அவ­ருக்கு நூறு­வீத நம்­பிக்கை இல்லை என்­பதால் தான், எதி­ர­ணி­யி­னரின் பிர­சா­ரங்­க­ளுக்கு அவர் பதி­ல­ளிக்க வேண்­டிய நிலைக்குள் தள்­ளப்­பட்­டி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச ஒரு வேளை, இந்த தேர்­தலில் தோல்­வியைத் தழு­வினால், அவர்,

*எதி­ர­ணி­யினர் கூறு­வது போன்று ஊழல் குற்­றச்­சாட்­டு­களைச் சந்­திக்க நேரி­டுமா? 

 *சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ர­ணைக்­காக கொண்டு செல்­லப்­படும் நிலை உரு­வா­குமா?

*தோல்­வி­யுற்­ற­வுடன், வெளி­நாட்­டுக்குத் தப்­பிச்­ செல்ல முனை­வாரா?

* ஆட்­சி­ய­தி­கா­ரத்தை சுமு­க­மாக ஒப்­ப­டைக்க முன்­வ­ரு­வாரா? இந்தக் கேள்­விகள் இப்­போது பர­வ­லா­கவே கேட்­கப்­ப­டு­கின்­றன.

மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை மூடி, ஊழல் செய்­த­வர்கள் தப்­பி­யோ­டாமல் தடுக்­கப்­படும் என்று கூறி­யது, பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

பொது­வா­கவே, நீண்­ட ­காலம் ஆட்­சியில் இருந்­த­வர்கள், தேர்தல் ஒன்றில் தோற்­க­டிக்­கப்­படும் போது, நாட்டை விட்டு இர­வோடு இர­வாகத் தப்­பி­யோ­டு­வது வழக்கம். அல்­லது இரா­ணு­வத்தின் துணை­யுடன், அதி­கா­ரத்தை இறுகப் பற்றிக் கொள்­வ­தற்கு முயற்­சிப்­பார்கள்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்­த­வ­ரையில், இர­வோடு இர­வாக நாட்டை விட்டு தப்­பிச்­ செல்லும் முடிவை எடுப்பார் என்று நம்­பு­வ­தற்­கில்லை.

ஏனென்றால், அவர் உள்­நாட்டில் இருந்து கொண்டு எத்­த­கைய நிலை­மை­க­ளையும் எதிர்­கொள்­வ­தற்கு அவ்­வ­ள­வாக அஞ்ச வேண்­டிய நிலை இல்லை.

சரத் பொன்­சே­காவைப் பிடித்து அடைத்­தது போன்று, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவை இர­வோடு இர­வாகப் பிடித்து சிறையில் போட முடி­யாது.

அதற்கு இந்­தியா போன்ற நாடுகள் அனு­ம­திக்க வாய்ப்­பில்லை.

அதே­வேளை, தோல்­வி­யுற்ற ஆட்­சி­யா­ளர்கள் எப்­போதும், இரா­ணு­வத்தின் துணை­யுடன் ஆட்­சியைத் தக்­க­ வைத்துக் கொள்ளும் முயற்­சியில் ஈடு­ப­டு­வது போல, இங்கு நிக­ழாது என்று கூறு­வ­தற்­கில்லை.

ஏனென்றால், முப்­ப­டை­க­ளி­னதும் முழு­மை­யான கட்­டுப்­பாடும், ஜனா­தி­ப­தி­யி­னதும், பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக்சவி­னதும் கட்­டுப்­பாட்டில் தான் இருக்­கின்­றன. இத்­த­கை­ய­தொரு நிலையில், எதி­ர­ணி­யி­னரின் எத்­த­கைய நகர்­வு­க­ளையும் தடுப்­ப­தற்கு, அவர்கள் படை­ப­லத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்ள முனை­வது ஆச்­ச­ரி­ய­மா­ன­தாக இருக்­காது.

தனது பத­விக்­காலம் முடி­வ­டைய முன்­னரே தேர்தல் நடத்­தப்­ப­டு­வதால், தோல்­வி­யுற்­றாலும் இன்னும் இரண்டு ஆண்­டுகள் பத­வியில் நீடிக்­கலாம் என்ற விவாதம் ஒன்று பல­மாக நடந்து கொண்­டி­ருக்­கின்ற பின்­ன­ணியில் இத்­த­கைய வாய்ப்­பு­களை நிரா­க­ரிக்க முடி­யாது.

ஆனால், ஜனா­தி­பதித் தேர்தல் ஒன்றில் வேட்­பாளர் ஒருவர் வெற்றி பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்ட மறு­க­ணமே, அவர் தான் நாட்டின் ஜனா­தி­பதி என்று அர­சி­ய­ல­மைப்பில் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ள­தாக, முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா, சட்­டத்­த­ரணி விஜே­தாச ராஜபக்ச போன்­ற­வர்கள் வாதி­டு­கின் ­றனர்.

வெற்­றி­பெற்ற 14 நாட்­க­ளுக்குள், புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்க வேண்டும் என்றும் அர­சி­ய­ல­மைப்பின் 31வது பிரிவில் கூறப்­பட்­டுள்­ள­தாக சரத் என் சில்வா கூறி­யி­ருக்­கிறார்.

எனவே பத­வியில் இருக்­கின்ற ஜனா­தி­பதி ஒருவர் தோல்­வி­யுற்­றாலும் கூட, எஞ்­சிய பத­விக்­காலம் வரை தானே பத­வியில் இருப்பேன் என்று அடம்­பி­டிக்க முடி­யாது.

ஆனால், இக்­கட்­டான சூழல் வரும் போது எல்­லோரும் சட்­டத்தை மதித்து நடந்து கொள்­வார்கள் என்று உறு­தி­யாக கூற­மு­டி­யாது.

என்ன நடக்கும் என்­பதை, வரும் ஜன­வரி 9ம் திகதி தான் உறு­தி­யாக கூற முடியும்.

அதே­வேளை, இந்த தேர்­தலில் ஏற்­படும் தோல்­வி­யா­னது ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவை சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு கொண்டு செல்லும் என்றும் எதிர்­பார்க்க முடி­யாது.

ஏனென்றால், மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் வெற்றி பெற்றால், மஹிந்த ராஜபக்சவையோ அவ­ரது குடும்­பத்­தி­ன­ரையோ, போரில் ஈடு­பட்ட படை­யி­ன­ரையோ சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு கொண்டு செல்ல விட­மாட்டேன் என்று ஆரம்­பத்­தி­லேயே உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

அதை­விட, இலங்கை தொடர்­பான சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கப் போவ­தில்லை என்றும், உள்­நாட்டு பொறி­மு­றை­களின் மூலமே தீர்வு காணப்­ போ­வ­தா­கவும் அறி­வித்­தி­ருக்­கிறார் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

எனவே, அவர் வெற்றி பெற்றால் கூட, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவை சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு இழுத்துச் செல்ல ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டார்.

மேலும், எதி­ர­ணியில் உள்ள ஜாதிக ஹெல உறு­மய அத்­த­கை­ய­தொரு முடி­வுக்கு அனு­ம­திக்­கவும் மாட்­டாது.

ஜாதிக ஹெல உறு­ம­ய­வுக்கும், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடையில் செய்து கொள்­ளப்­பட்­டுள்ள புரிந்­து­ணர்வு உடன்­பாட்டில் இது­பற்­றிய ஒரு அம்­சமும் உள்­ளது.

எனவே, சர்­வ­தேச விசா­ரணை ஒன்­றுக்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கொண்டு செல்­லப்­ப­டு­வ­தற்கு, உள்­நாட்டில் சூழல்கள் ஏதும் உரு­வாக வாய்ப்­பில்லை.

அது­போ­லவே, அயல் நாடான இந்­தி­யாவும் கூட அத்­த­கைய முயற்­சி­களை தடுத்து நிறுத்­து­வ­தற்குத் தயங்­காது.

சர்­வ­தேச விசா­ரணை என்ற பேரில் இலங்­கையில் இருந்து எவ­ரை­யேனும், சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு கொண்டு செல்­வ­தற்கு இந்­தியா அனு­ம­திக்­காது என்றே கரு­தப்­ப­டு­கி­றது.

ஏனென்றால், காஷ்­மீரில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெ­று­வ­தான குற்­றச்­சாட்டை இந்­தியா எதிர்­கொள்­கி­றது.

எனவே, இலங்­கையில் இருந்து எவ­ரேனும் சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு கொண்டு, செல்­லப்­ப­டு­வதை இந்­தியா ஆத­ரிக்­காது, அனு­ம­திக்­காது.

ஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு, சர்­வ­தேச நீதிமன்றத்துக்கு ஆட்சியாளர்களையோ, இராணுவ அதிகாரிகளையோ இழுத்துச் செல்வதற்கான வாசல்களை உடனடியாகத் திறக்கும் என்று எவரும் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

சர்வதேச நீதிமன்றத்துக்கு எவரையேனும் கொண்டு செல்வதென்பது ஒரு நீண்டகால செயல்முறையாக இருக்குமே தவிர, ஒரு தேர்தலின் முடிவு போன்ற குறுகிய கால நிகழ்வுகள் அதனைத் தீர்மானித்து விடாது.

தமக்கே வெற்றி என்று பிரசாரம் செய்யாமல், தோல்வியுற்றால் என்ன நிகழும் என்று எதிர்மறையாக பிரசாரம் செய்து அனுதாபம் தேடும் நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குத் தோன்றியுள்ளது.

அதனால் தான், தோல்வியின் பிந்திய நிலை குறித்து அரசியல் அரங்கிலும் பிரசார அரங்கிலும் அதிகளவு, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அரசதரப்பும் கூட இதனைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

சத்ரியன்

– See more at: http://www.newstamilwin.com/show-RUmszCRVKajp7.html#sthash.34MJdyMN.dpuf

SHARE