வாகரை திருகோணமலை பிரதான வீதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு பாதை தெரியாமையால் இரண்டு பேருந்து பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது.

108

 

குளிரில் பெண்ணொருவர் மரணம்- வீதியை மூடிய வெள்ளம்! பாதையை விட்டு விலகிய பேருந்துகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அடை மழை பெய்துவருகின்ற நிலையில், குளிரினால் பெண் ஒருவர் சனிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த ஐய்யாத்துரை வசந்தி (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குளிரினால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பெண் குளிரினால் உயிரிழந்துள்ளமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அலுவலகத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

வெள்ளப்பெருக்கு காரணமான பஸ்கள் பாதையை விட்டு விலகல்!

வாகரை திருகோணமலை பிரதான வீதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு பாதை தெரியாமையால் இரண்டு பேருந்து பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது.

கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும், திருக்கோயிலில் இருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் இவ்வாறு வெள்ளம் காரணமாக ஒரே நேரத்தில் 50 மீற்றர் இடைவெளிகளில் வீதியை விட்டு வெளியே சென்றுள்ளது.

இதன்போது எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டவில்லை என தெரியவருகின்றது.

 

SHARE